கடல் நத்தை நஞ்சிலிருந்து கடும்வலிக்கு நிவாரணம்

சிறிய நத்தை ஒன்றிலிருந்து எடுக்கப்படும் நஞ்சு நாள்பட்ட வலியை குணப்படுத்துவதில் உதவக் கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்

பிபிசி, மருந்துபடத்தின் காப்புரிமைMY HUYNH

Image captionகோனஸ் ரெய்ஜியுஸ் கடல் நத்தையின் கூடுகள்

அமெரிக்காவின் யூட்டாஹ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், எலிகளிடம் நடத்திய ஆய்வில் நம்பிக்கையூட்டும் இந்த முடிவு தெரியவந்துள்ளது.

கோனஸ் ரெய்ஜியுஸ் என்றழைக்கப்படும் கடல் நத்தை, உணவுக்காக இலக்கு வைக்கும் ஜீவராசிகள் மீது இந்த நஞ்சைப் பாய்ச்சி அதை முடக்கவோ அல்லது கொல்லவோ பயன்ப்படுத்துகிறது.

ஆனால் எலிகள் மீது இந்த நஞ்சை குறிப்பிட்ட அளவில் செலுத்தினால் மூன்று நாட்களுக்கு பிறகும் அது வேலை செய்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதன் மூலம் வேறு வழிகளில் வலி நிவாரணம்பெற முடியாதவர்களுக்கு, புதிய மருந்தை உருவாக்க இது பயன்படக் கூடும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள.

ஓபியாய்ட்ஸ் எனப்படும் வலி நிவாரணிகள் மிதமானது முதல் கடுமையான வலி உள்ளவர்களுக்கு, வலி குறைவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, நோயாளிக்கு சிறிதளவு ஆறுதலை அளிக்கிறது.

மூளை மற்றும் உடலின் வேறு சில உறுப்புகளில் இருக்கும் புரதங்களுடன் இந்த வலிநிவாரணி ஒட்டிக்கொண்டு செயல்படுவதால் வலி குறைவதைப்போன்ற எண்ணம் உருவாகிறது.

நரம்பு மண்டலத்தின் மீது தாக்கம்

ஆனால் கரீபியன் பகுதியில் இருக்கும் இந்த கோனஸ் ரெய்ஜியுஸ் கடல் நத்தையின் நஞ்சிலிருந்து எடுக்கப்படும் Rg 1A எனப்படும் வேதியியல் கூட்டு, வேறு வழியில் வேலை செய்வதால், வலி நிவாரணத்துக்கான புதிய பாதையொன்று திறந்துள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த வேதியியல் கூட்டு நரம்பு மண்டலத்தின் சில பகுதிகள் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவது போலத் தோன்றுவதாக என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கண்டுபிடிப்பு வலியைக் குறைப்பதில் புதிய வழிகளை ஏற்படுத்தியுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.

தீர்க முடியாத கடுமையான வலி ஏற்பட்டால் அதற்கு மருத்துவம் அளிப்பது கடினம் எனும் நிலையில், இந்த ஆய்வின் முடிவு உற்சாகமூட்டுகிறது என்று ஆய்வை முன்னெடுத்த யூட்டாஹ் பல்கலைக்கழக உளவியில்துறை பேராசிரியர் ஜெ மைக்கேல் மெக்கிண்டாஷ் கூறுகிறார்.

இந்த புதிய வேதியியல் கூட்டானது அடிப்படையில் வலி ஏற்படுவதை தவிர்க்கிறது என்றும் வேறு வழிகளில் நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு புதிய சிகிச்சை அளிக்கப்படும் வாய்ப்பை உருவாக்குகிறது என்று அவர் கூறுகிறார்.

எலிகளுக்கு கதிரியக்கச் சிகிச்சை அளிக்கும்போது, தொடுவுணர்ச்சி மற்றும் ஈரப்பதத்தால் வலியை உணர்ந்த அவை, இந்த நத்தை நஞ்சிலிருந்து உருவாக்கப்பட்ட வேதியியல் கூட்டின் சிறு அளவைக் கொடுத்தபோது வலியை உணரவில்லை என்பது கண்டறியப்பட்டது.

எலிகளுக்கு ஊசி மூலம் இந்த மருந்து செலுத்தப்பட்டு 72 மணி நேரங்களுக்கு பிறகும் அவை வலி உணர்வை தடுத்தன என்றும் பேராசிரியர் மெக்கிண்டாஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்: மு.க. ஸ்டாலின்;;

தமிழ்நாடு சட்டப்பேரவையின் தலைவர் தனபால் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்போவதாக தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இன்று காலையில் தலைமைச் செயலகத்திற்கு வந்த மு.க. ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசும்போது இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது சபாநாயகர் நடந்துகொண்ட முறை ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பதால், அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கான கடிதத்தை பேரவையின் செயலர் ஜமாலுதீனிடம் அளித்ததாகவும் அதன் பிரதியை சபாநாயகரிடம் அளித்திருப்பதாகவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிப்பு (புகைப்படத் தொகுப்பு)

குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க உண்ணாவிரத போராட்டம்

சட்டப்பேரவையில் நடந்த மோதலில் ஸ்டாலினின் சட்டை கிழிந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் நடக்கும் விவாதங்கள் குறித்துக் கேட்டபோது, அதற்குத் தான் பதிலளிக்க விரும்பவில்லையென ஸ்டாலின் கூறினார்.

சுற்றுச்சூழல் விதி மீறல் புகாரில் ஈஷா யோகா மையம்: விழாவில் பிரதமர் பங்கேற்க எதிர்ப்பு ”;;

கோயம்புத்தூர் மாவட்ட எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர சிவன் சிலையை பிப்ரவரி 24ஆம் தேதியன்று திறப்பதற்காக இந்தியப் பிரதமர் வருவதாகக் கூறப்படும் நிலையில், அந்த மையம் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஜக்கி வாசுதேவ் எனப்படும் ஆன்மீக குருவினால் நடத்தப்படும் இந்த மையத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று, மகா சிவராத்திரி தினத்தையொட்டி நடக்கும் விழாவுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வையடுத்து, ஈஷா யோகா மையத்தின் விதிமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளன.

சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில், அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 44 ஆயிரம் சதுர அடி பரப்பிலான கட்டடங்களை இடிப்பதற்கு ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், இப்போது 112 அடி உயரமுள்ள சிவன் சிலை நிர்மாணிக்கப்பட்டிருப்பது குறித்து சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்கள், சலுகை விலையில் மின்சாரம், தொடர்ந்து கட்டுமானப் பரப்பை அதிகரித்துக்கொண்டே போவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இதுவரை 5 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கம் ஒரு வழக்கைப் பதிவுசெய்துள்ளது.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, இந்த சிலை திறக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமென தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது. தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டுவரும் ஈஷா யோகா மையத்தின் விழாவில் கலந்துகொள்ளக்கூடாது என இந்தியப் பிரதமருக்கு பூவுலகின் நண்பர்கள் சார்பில் கடிதம் ஒன்றும் எழுதப்பட்டுள்ளது.

இது குறித்து பிபிசியிடம் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வெற்றிச்செல்வன், “இம்மாதிரி தொடர்ந்து சட்டமீறலிலும் விதி மீறலிலும் ஈடுபடும் அமைப்பு நடத்தும் விழாவில் பிரதமர் கலந்துகொள்வது வருத்தமளிக்கிறது. தமிழக அரசு இந்த அமைப்புக்கு சலுகை விலையில் மின்சாரம் அளிப்பதும் கூடாது,” என்று கூறினார்.

இது தொடர்பாக ஈஷா யோகா மையத்தின் கருத்தை அறிய முயன்றபோது, சிவராத்திரி விழா தொடர்பான பணிகளில் அனைவரும் பரபரப்பாக இருப்பதால், அந்த விழா முடிந்த பிறகு இது குறித்துப் பேசுவதாகக் கூறினர்.

இந்த விவகாரம் குறித்து ஈஷா யோகா மையத்தின் இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் சட்டத்திற்கு உட்பட்டே அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்வதாகவும் மாவட்ட ஆட்சியர், வனத்துறை உள்பட அனைத்து அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்றே கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளனர்.

மின்னணு கழிவு

சர்வதேச அளவிலான முக்கிய பிரச்சினைகளில் ஒன்று மின்னணு கழிவு. ஆண்டுக்காண்டு சேர்ந்து கொண்டிருக்கும் மின்னணு கழிவுகளை அகற்றுவது மிகப் பெரிய சவாலான பணியாக உருவாகிக் கொண்டிருக்கிறது. அபாயகரமான இந்த கழிவுகளை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவதற்கு முயற்சிகள் நடந்தாலும், அதன் தேக்கத்தால் உருவாகும் சூழலியல் பிரச்சினைகள் முக்கிய விவாத பொருளாகவே உள்ளன. அது குறித்த ஒரு பார்வை

# வீட்டு உபயோகப் பொருட்கள், பொழுதுபோக்கு மற்றும் நுகர்வோர் சாதனங்கள், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை உள்ளிட்ட துரைகளிலிருந்து அதிக மின்னணு கழிவுகள் உருவாகின்றன.

# கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன், ரெப்ரெஜிரேட்டர், வாஷிங் மெஷின், டிரையர், ஹோம் தியேட்டர், பேட்டரி பொம்மைகள் ,

# சர்வதேச அளவில் 2020-ம் ஆண்டுக்குள் மின்னணு கழிவு மேலாண்மை சந்தையின் மதிப்பு 504 கோடி டாலராக இருக்கும். 2014-ம் ஆண்டில் இது 166 கோடி டாலராக இருந்தது.

# 2015 ஆண்டிலிருந்து 2020ம் ஆண்டு வரையிலான வளர்ச்சி வீத எதிர்பார்ப்பு 20.6 சதவீதம்

# மின்னணு கழிவுகளிலிருந்து பல உலோகங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இரும்பு, இரும்பு அல்லாத பொருட்கள், பிளாஸ்டிக், கண்ணாடிகள், மரத்துண்டு, செராமிக் உள்ளிட்டவை கிடைக்கின்றன.

மின்னணு கழிவுகளை மறு சுழற்சி செய்வதில், சர்வதேச அளவிலான முக்கிய பெரிய நிறுவனங்கள்

> அரபிஸ் ஏஜி (Aurubis AG) ஜெர்மனி

> பாலிடன் ஏபி (Boliden AB) ஸ்வீடன்

> எம்பிஏ பாலிமர்ஸ் (MBA Polymers) கலிபோர்னியா

> எலெக்ட்ரானிக்ஸ் ரீசைக்கிளர்ஸ் இனடர்நேஷ்னல் அமெரிக்கா

> சிம்ஸ் மெட்டல் மேனேஜ்மெண்ட் ஆஸ்திரேலியா

> உமிகோர் எஸ்.ஏ (Umicore S.A. ) பெல்ஜியம்

> டெர்ரோனிக்ஸ் இண்டர்நேஷ்னல் இங்கிலாந்து

> என்விரோ-ஹப் ஹோல்டிங்ஸ் – சிங்கப்பூர்

> குளோபல் எலெக்ட்ரானிக் பிராசசிங் கனடா

# இ-வேஸ்ட் உருவாக்கத்தில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது.

# அதிக மின்னணு கழிவுகள் உருவாகும் நாடுகளில் இந்தியாவின் இடம் 5

# மின்னணு கழிவுகளின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 10 சதவீதமாக உள்ளது.

# உலக அளவில் ஆண்டுதோறும் 2 கோடி டன் முதல் 5 கோடி டன் வரையில் மின்னணு கழிவுகள் உருவாகின்றன.

# இந்தியாவில் ஆண்டுதோறும் உருவாகும் மின்னணு கழிவுகளின் அளவு 17 லட்சம் டன். 2012ம் ஆண்டில் இது 8 லட்சம் டன்னாக இருந்தது.

# உலக அளவிலான இ-வேஸ்டில் இந்தியாவின் பங்கு 4 சதவீதம். உலக அளவிலான ஜிடிபியில் 2.5 சதவீதம்

# வளர்ந்த நாடுகள் தங்களின் மின்னணு கழிவுகளை வளரும் நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் தொழில் வாய்ப்புகள் என்கிற பெயரில் ஏற்றுமதி செய்கின்றன. இந்தியாவும் மிகப் பெரிய அளவில் மின்னணு கழிவுகளை இறக்குமதி செய்கிறது.

# கர்நாடகாவைச் சேர்ந்த செரிபரா நிறுவனம் (cerebra computers) ஆண்டுக்கு 36,000 டன் மின்னணு கழிவுகளை மறு சுழற்சி செய்யும் ஆலையை வைத்துள்ளது.

# உலக அளவில் நகரங்களின் திடக்கழிவில் மின்னணு கழிவின் பங்கு 5 சதவீதம். இதர கழிவுகளை விடவும் இவை அபாயகரமாவை.

# வளர்ந்த நாடுகளில், அடுத்த 5 ஆண்டுகளில் இதர கழிவுகளை விட மின்னணு கழிவு வளர்ச்சி 3 மடங்கு அதிகரிக்கும்.

# மின்னணு கழிவில் பெரும்பான்மை வகிப்பது கம்யூட்டர், செல்போன்.

# இந்தியாவில் 70 சதவீத மின்னணு கழிவுகள் எரிக்கப்படுகிறன அல்லது புதைக்கபடுகின்றன.

# மின்னணு கழிவுகளை புதைக்கிறபோது நிலத்தடி நீர் வளமும், மீத்தேன் வாயுவும் குறைகின்றன. எரிக்கிறபோது 25 மடங்கு அதிகமான கார்பன் டையாக்ஸைட் வெளிப்படுகிறது.

# இந்தியாவில் மின்னணு கழிவுகளை கையாளும் வேலைகளில் 25,000 பேர் ஈடுபடுகின்றனர். கழிகளை சேகரிப்பது, உலோகங்களை பிரிப்பது உள்ளிட்ட வேலைகளை செய்கின்றனர். இது அபாயகரமான வேலை என்று ஐநா குறிப்பிட்டுள்ளது.

# நேபாளம், வங்கதேசம், தாய்லாந்து, கானா, நாடுகள் அதிக அளவில் மின்னணு கழிவுகளை கையாளுகின்றன.

# ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு வாடிக்கையாளரும் மின்னணு கழிவுகளின் மறு சுழற்சிக்கு தொகையை அளிக்க வேண்டும். இதனால் மறு சுழற்ச்சிகான செலவு சுமையாக இருக்காது – இதைச் சொன்னவர் அறிவியல் மற்றும் சுற்று சூழலுக்கான மைய இயக்குநர் சுனிதா நாராயணன்


சுனிதா

எதிர்க்கட்சியினர் இல்லாத பேரவை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி ;;

பேரவையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக தன் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார். | தவறவிடாதீர் > கடும் அமளி, ஸ்டாலின் சட்டைக் கிழிப்பு, திமுக வெளியேற்றம்: பேரவை பரபர நிமிடங்கள் |

சட்டப்பேரவை சனிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியதும், பேரவைத் தலைவர், அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான தீர்மானத்தை கொண்டு வர முதல்வருக்கு அனுமதி அளித்தார். பலத்த அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் பேரவை உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினர்.

இந்நிலையில் திமுகவினருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அணியினர் முழக்கமிட்டதால் அமளி ஏற்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு காரணமாக சட்டப்பேரவையின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் 6 பிரிவுகளாக அமர்த்தப்பட்டனர். முதல் மூன்று பிரிவுகளில் அதிமுகவினரும், மற்ற மூன்று பிரிவுகளில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமர்ந்தனர்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை

ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு ஓபிஎஸ் அணி கொறடா செம்மலை கோரிக்கை விடுத்தார். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் செம்மலை வேண்டுகோள் விடுத்தார்.

”உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும், எம்.எல்.ஏக்களின் உரிமை, மாண்பு பாதுகாக்கப்படும்” என்று சபாநாயகர் தனபால் கூறினார். சபாநாயகர் தவிர, சட்டப்பேரவையில் 230 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்க ஸ்டாலின் கோரிக்கை

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ”ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே உண்மையான ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும். வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்க வேண்டும். ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்திருக்கும்போது அவசரமாக வாக்கெடுப்பு நடத்துவதற்கு காரணம் என்ன?” என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் அளித்த அவகாசத்தை கருத்தில் கொண்டே இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறுவதாகக் கூறி ஸ்டாலின் கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார்.

முன்னதாக, சிறைக்கைதிகள் போல் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அழைத்து வரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

பேரவையில் ஓபிஎஸ் பேசுகையில், ”கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டதை அனைவரும் அறிவர். மக்களின் குரல் பேரவையில் ஒலிக்க, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொகுதிக்குச் சென்று வந்த பிறகே வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

என் உரிமையில் யாரும் தலையிடக் கூடாது: சபாநாயகர்

ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று சபாநாயகர் தனபால் கூறினார். மேலும், வாக்கெடுப்பு முறை எனது தனிப்பட்ட முடிவு, என் உரிமையில் யாரும் தலையிடக் கூடாது என்றார்.

மக்களை சந்திக்க சட்டப்பேரவை உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும் என்று மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ நட்ராஜ் கோரிக்கை விடுத்தார். இவ்வாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதால் பேரவை தொடங்கி ஒருமணிநேரம் ஆகியும் வாக்கெடுப்பு தொடங்கவில்லை.

1 மணி வரை அவை ஒத்திவைப்பு

இந்நிலையில், வேண்டும் வேண்டும் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர், எதிர்க்கட்சியினர் சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். இதனால் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை மேஜை மீது ஏறி நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருக்கைகளை தட்டியும், காகிதங்களைக் கிழித்தெறிந்தும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பேரவையில் இருந்து சபாநாயகர் வெளியேறினார்.

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை மேஜை மீது ஏறி நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருக்கைகளை தட்டியும், காகிதங்களைக் கிழித்தெறிந்தும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் அமைதி காக்காததைக் கண்டித்து பேரவையில் இருந்து சபாநாயகர் வெளியேறினார். சபாநாயகரை பாதுகாப்பாக அவை காவலர்கள் அழைத்துச் சென்றனர். இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டம் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பேரவைத் தலைவர் தனபால் மைக் உடைக்கப்பட்டது. அவரது இருக்கை சேதப்படுத்தப்பட்டது. பேரவை செயலாளர் ஜமாலுதீன் இருக்கையும் உடைக்கப்பட்டது. இந்த பலத்த அமளிக்கு இடையிலும், எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டும் அமைதி காத்தது குறிப்பிடத்தக்கது.

அவை 1மணி வரை ஒத்திவைக்கப்பட்டதால், சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளியே வந்து, பிறகு பேரவைக்குள் சென்றனர். இந்த இடைவெளியில் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

108 ஆம்புலன்ஸ் வருகை

தலைமைச்செயலகத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வந்தது. ரகளையின் போது மயக்க வந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட அவைக்காவலர் பாலாஜி ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார்.

மீண்டும் கூடிய சட்டப்பேரவை

ஒத்திவைப்புக்குப் பின்னர் சட்டப்பேரவை மீண்டும் கூடியது. சபாநாயகர் தனபால், ”தனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது?அவை விதிகளின்படியே அவையை நடத்த கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார்.

திமுகவினர் வெளியேற்றம்; 3 மணி வரை அவை ஒத்திவைப்பு

ரகசிய வாக்கெடுப்பு மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு தேதியை ஒரு வாரம் ஒத்திவைக்க வேண்டும் என்று ஸ்டாலின் இரு கோரிக்கைகளை முன்வைத்தார். சபாநாயகர் அதை ஏற்காததால் திமுகவினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் மைக் இரண்டாவது முறையாக உடைக்கப்பட்டது. அதிமுக அமைச்சர்களின் இருக்கையின் மீதேறி திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சபாநாயகர் தனபால், ”அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததால் திமுகவினரை வெளியேற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டார். இதனால் பேரவையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அவைக் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திமுகவினரை வெளியேற்ற முடியாமல் அவைக்காவலர்கள் திணறினர். மீண்டும் அமளி ஏற்பட்டதால் சட்டப்பேரவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

சட்டப்பேரவைக்குள் திமுகவினர் தர்ணா

சட்டப்பேரவைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து சேகர் பாபு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உத்திரமேரூர் சுந்தர், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், தளி பிரகாஷ், நந்தகுமார் ஆகியோர் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

அவையில் இருந்து வெளியேற திமுகவினர் மறுப்பு தெரிவித்தனர். தரையில் அமர்ந்து ஸ்டாலின் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குண்டுக்கட்டாக அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய ஸ்டாலின், ”ஜனநாயக முறையில் அறப் போராட்டம் நடத்தினோம். எங்களை குண்டுக்கட்டாக தூக்கி அடித்து, உதைத்து சட்டைகளை கிழித்தனர். இது குறித்து ஆளுநரிடம் முறையிடுவோம்” என்றார்.

அதற்குப் பிறகு ஸ்டாலின் ஆளுநரை சந்திக்க புறப்பட்டார். ஸ்டாலினுடன் 9 எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்திக்க சென்றனர்.

காங்கிரஸ் வெளிநடப்பு

இந்த நிலையில் திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

3 மணிக்கு கூடிய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த தீர்மானத்துக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.

குரல் வாக்கெடுப்புதான் மரபு. தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளால் எண்ணிக்கை வாக்கெடுப்பு தொடங்குவதாக சபாநாயகர் தனபால் கூறினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவைக்குள் இல்லாததால் நடுநிலைமை வாக்குகள் எதுவும் இல்லை.

வாக்கெடுப்புக்கு முந்தைய பின்னணி

முன்னதாக, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அதன்பின் டிசம்பர் 29-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானார். புதிய அமைச்சரவை அமைந்து 2 மாதங்கள் கழிந்த நிலையில், திடீரென பிப்ரவரி 5ம் தேதி, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக தற்போது 10 எம்எல்ஏக்கள் தலைமையை எதிர்த்து வெளியேறியுள்ளனர். சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னை கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

கடந்த 14-ம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சசிகலா சிறைக்கு சென்றார். அன்றே சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவரும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தங்களுக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் தொடர்ந்து வலியுறுத்தியது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார். மாலையே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 30 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றது.

முன்னதாக, ஆட்சி அமைக்க அழைக்கும்போது, 15 நாட்களுக்குள் சட்டப்பேரவையில் அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தினார். அதன்படி, சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், இன்று பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி, அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இது மூன்றாவது முறை…

சட்டப்பேரவையில் அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் இதுபோன்ற நிகழ்வு நடப்பது 3-வது முறையாகும். முதலில் 1952-54 காலகட்டத்தில் ராஜாஜி தமிழக முதல்வராக இருக்கும் போது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்பின் எம்ஜிஆர் மறைவை அடுத்து 1988-ல் அரசு மீது நம்பிக் கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது 3-வது முறையாக இன்று பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடந்தது.

அதில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக தன் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்.

சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிப்பு ;;

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது சட்டை கிழிந்திருந்த நிலையில் வெளியேறினார். அதன் புகைப்படத் தொகுப்பு.

சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிப்பு (புகைப்படத் தொகுப்பு)
சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிப்பு (புகைப்படத் தொகுப்பு)
சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிப்பு (புகைப்படத் தொகுப்பு)
சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிப்பு (புகைப்படத் தொகுப்பு)
சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிப்பு (புகைப்படத் தொகுப்பு)
சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிப்பு (புகைப்படத் தொகுப்பு)
சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிப்பு (புகைப்படத் தொகுப்பு)
சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிப்பு (புகைப்படத் தொகுப்பு)

 

பிப்.17-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் ;;

தமிழக முதல்வராக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை பதவி ஏற்குமாறு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடத்த பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து பிற 30 அமைச்சர்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள ஆளுநர் அவர்களுக்கு ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர், சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளனர். இந்த நிலையில் பல்வேறு திருப்பங்கள் இன்றும் (வெள்ளிக்கிழமை) அரங்கேறி வருகின்றன. அவற்றின் தொகுப்பு.

நிகழ்நேரப் பதிவு நிறைவு

*

8.50 pm: அதிமுக எம்எல்ஏக்கள் நல்ல முடிவெடுக்க வேண்டும்: ஓபிஎஸ் பேட்டி

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளார்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, ”தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெறக் கூடாது என்பதற்காக உடல்நிலையைக் கூட பாராமல் ஜெயலலிதா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மக்கள் வாக்களித்தது ஜெயலலிதாவுக்குத்தான். அவரது எண்ணங்கள் நிறைவேற அதிமுக எம்எல்ஏக்கள் சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும்” என்றார். அதன் விவரம்: அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும்: ஓபிஎஸ்

7.30 pm ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்தது கட்சியின் விதிகளுக்குப் புறம்பானது. அவர் அதிமுகவில் செய்த நியமனங்கள் செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் புகாருக்கு வரும் 28-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன் விவரம்: சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

7.20 pm திருநாவுக்கரசர் வேண்டுமென்றே திரித்துக் கூறுகிறார். அவர் விரைவில் அதிமுகவில் சேருவதாகத் தகவல் வருகிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். அதன் விவரம்: சசிகலாவுக்கு ஆதரவாகவே திருநாவுக்கரசர் பேசி வருகிறார்: ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

7:10 pm: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காங். வாக்களிக்கும் என சமூகவலைதளத்தில் வெளியான தகவல் தவறானது. காங்கிரஸ் தலைமை அளிக்கும் ஆலோசனையின் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள் – திருநாவுக்கரசர்

6:45 pm: ரகசிய வாக்கெடுப்பு நடந்தால் திமுக வரவேற்கும்: ஸ்டாலின்

திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், ”அதிமுக ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வாக்களிப்போம். ரகசிய வாக்கெடுப்பு நடந்தால் திமுக வரவேற்கும்” என்றார். அதன் விவரம்: எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து திமுகவின் 89 உறுப்பினர்களும் வாக்களிக்க முடிவு: ஸ்டாலின்

6.25 pm: சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க திமுகவும், காங்கிரஸும் முடிவு செய்துள்ளன.

5.30 pm: சென்னை அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

5.25 pm: கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

5.17 pm: தமிழக சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறும் நிலையில், சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

5.08 pm: சசிகலாவை நீக்க மதுசூதனனுக்கு அதிகாரம் கிடையாது என்று அதிமுக அவைத் தலைவர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

4.43 pm: “திமுக மட்டுமே திராவிடக் கட்சி. அதிமுக திராவிடக் கட்சியின் வழித் தோன்றல் கிடையாது. தமிழகத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்தல் நடத்தினால் திமுகவே வெற்றி பெறும்” என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். அதன் விவரம்: குறுக்குவழியில் திமுக ஆட்சியைப் பிடிக்காது: கனிமொழி

4.13 pm: “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தை அமைதிப்பூங்காவாக மாற்றி வைத்திருந்தார். அந்த நிலைமையை காவல்துறையினரே மாற்றிவிட வேண்டாம் என்று அன்போடு காவல்துறையினரை வேண்டிக்கொள்கிறேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். விவரம்> அமைதிப்பூங்காவான தமிழகத்தை காவல்துறையினரே மாற்றிவிட வேண்டாம்: ஓபிஎஸ் கோரிக்கை

3.33 pm: “எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தற்காலிக அரசாகவும், பினாமி அரசாகவும் செயல்படக் கூடாது” என்று விடுதலை சிறுதைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

2 .43 pm: சட்டப் பேரவை அவை முன்னவராக அதிமுகவின் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டப் பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலிலதா ஆட்சியில் சட்டப் பேரவை அவை முன்னவராக ஓ. பன்னீர்செல்வம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் விவரம்: சட்டப்பேரவையின் அவை முன்னவராக செங்கோட்டையன் நியமனம்

1.45 pm: “மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதே எனது கடமை. மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதுதான் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களின் கடமை. அந்த அடிப்படையில் எனது ஆதரவு, ஓ.பன்னீர்செல்வம் அணிக்குதான். இதை எதிரொலிக்கும் வகையில்தான் சட்டப்பேரவை வாக்கெடுப்பில் எனது வாக்கை செலுத்துவேன்” என்று மயிலாப்பூர் எம்.எல்.ஏ. ஆர்.நட்ராஜ் கூறியுள்ளார். விவரம்> மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு: நட்ராஜ் விளக்கம்

மயிலாப்பூர் தொகுதி மக்களின் கருத்தை அறிந்து நல்ல முடிவெடுப்பேன் என்று அத்தொகுதியின் எம்.எல்.ஏ. ஆர்.நட்ராஜ் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இப்போது அவர் தன் முடிவை வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இவரது ஆதரவு யாருக்கு என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

மயிலாப்பூர் எம்எல்ஏ ஆர். நட்ராஜின் ஆதரவை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்துள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 10 ஆக (ஓ. பன்னீர்செல்வத்தை தவிர்த்து) அதிகரித்துள்ளது. இதுவரை 12 எம்பிக்கள் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.

1.30 pm: தமிழகத்தில் தற்போது தொடங்கியிருக்கும் புதிய கலாச்சாரம் ‘சமாதி அரசியல்’ என பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டலாக தெரிவித்திருக்கிறார். விவரம்> தமிழகத்தில் தொடங்கியிருக்கும் புதிய கலாச்சாரம் ‘சமாதி அரசியல்’: ராமதாஸ் கிண்டல்

1 .20 pm: கூவத்துரில் இன்று மாலை 3 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

1.15 pm: நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். ஓ. பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜனும் பங்கேற்குமாறும் கொறடா ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

1.05 pm: சட்டப் பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் அணியினர் சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக மனு ஒன்றையும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

12.56 pm: “நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கெடுப்போம்” என்று முன்னாள் அமைச்சரும், ஓ. பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளருமான மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

12.48 pm: நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலை சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பில் ஓ. பன்னீர்செல்வத்துடன், முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், மாஃபா பாண்டியராஜன் உடன் சென்றுள்ளனர்.

12.30 pm: சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார். விவரம்> சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக மதுசூதனன் அறிவிப்பு

12.15 pm: தமிழக முதல்வராக பதவியேற்றதற்காக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததற்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். விவரம்> மோடிக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் கடிதம்

12.00 pm: தமிழக முதல்வர் செயல்பாட்டை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

11.40 am: எடப்பாடி பழனிசாமி முதல்வரானதை கண்டித்து சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகம் முன்பு, ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவரம்> எடப்பாடி பழனிசாமி முதல்வரானதை எதிர்த்து சேலத்தில் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆரப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் | படம்: எஸ்.குரு பிரசாத்

11.22 am: நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்கஅதிமுக எம்எம்ஏ நட்ராஜ் முடிவு செய்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

11.15 am: “பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்ற பேச்சுக்கே இடமில்லை. நாளை ஒற்றுமையாக இங்கிருந்து ஒன்றாக செல்வோம். அதற்காகவே கூவத்தூரில் தங்கியிருக்கிறோம்” அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மனியன்.

11.00 am: தற்போது ஆட்சி அமைந்துள்ள அரசு முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்காது. நாளைவரை இந்த அரசு தொடருமா என்பதே சந்தேகமே என்று பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். விவரம்> முதல்வர் பதவியில் பழனிசாமி நீடிப்பது கேள்விக்குறியே: பொன்.ராதாகிருஷ்ணன்

10.45 am: நாளை( சனிக்கிழமை) நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் எம் எல் ஏக்கள் பங்கேற்க வேண்டும் என்றும், திமுக ஆட்சி அமைத்தால் காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும். அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் கொறடா விஜய தாரணி தெரிவித்துள்ளார்.

10.40 am: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர் ஆதரவு யாருக்கு என்பது குறித்து இன்று(சனிக்கிழமை) மாலை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10.30am: திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.

முந்தைய செய்திகள்

தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி நேற்று பதவி யேற்றார். அவருடன் அதிமுக அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட் டையன் உட்பட 30 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விவரம்> செங்கோட்டையன் உள்ளிட்ட 30 அமைச்சர்களுடன் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பு

மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப அதிமுக எம்எல்ஏக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பேரணி நடைபெறும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். விவரம்> அதிமுக எம்எல்ஏக்கள் நல்ல முடிவு எடுக்க கோரி தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பேரணி: ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அமைச்சரவையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு 5 ஆண்டு களுக்குப் பிறகு, அதிமுக அமைச் சரவையில் கே.ஏ.செங்கோட்டையனுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.விவரம்> 5 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் இடம்பெற்ற செங்கோட்டையன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் செங்கோட்டை யன் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் கூவத்தூர் விடுதியிலேயே தங்கியதாக அதிமுக வட்டாரங களில் கூறப்படுகிறது. விவரம்> கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்க வைப்பு? – சமாதான முயற்சியில் அதிமுக மூத்த நிர்வாகிகள்

அமைச்சரவையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு 5 ஆண்டு களுக்குப் பிறகு, அதிமுக அமைச் சரவையில் கே.ஏ.செங்கோட்டையனுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. விவரம்> 5 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் இடம்பெற்ற செங்கோட்டையன்

தமிழக மக்கள் மீது தேர்தலை திணிக்க முயன்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திமுகவின் சதி முறிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.விவரம்> தேர்தலை திணிக்க முயன்ற ஓபிஎஸ், திமுக சதி முறியடிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான புதிய அமைச்சரவை பதவி யேற்பு விழாவில் பங்கேற்பதற் காக கூவத்தூர் தனியார் விடுதி யில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்கள் வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர். விவரம்> பதவியேற்பு விழாவில் எண்ணப்பட்ட எம்எல்ஏக்கள்

ஸீலாண்டியா எட்டாவது கண்டமாக மாறுமா?

ஸீலாண்டியா என்று அழைக்கப்படும் புதிய கண்டம் ஒன்றை கண்டுபிடித்திருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

நியூசிலாந்து மற்றும் நியூ கலிடோனியா தீவுக் கூட்டத்தோடு, இந்த கண்டத்தின் பெரும்பாலான நிலப்பகுதி நீருக்கடியில் உள்ளது.

இது ஒரு கண்டத்திற்கான எல்லா பண்புகளையும் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் எண்ணினாலும், அதை சுற்றியுள்ள பகுதியில் மேலே, தனித்தன்மையான நிலவியலோடு இது அமைந்துள்ளது.

சியாலாண்டியா

கண்டங்களை முறையாக அங்கீகரிக்கின்ற விஞ்ஞானிகள் அமைப்பு என்று எதுவும் இல்லை.

எனவே, ஸீலாண்டியாவை ஒரு கண்டமாக ஏற்றுகொள்ளுவதற்கு இன்னும் சிறிது காலம் எடுக்கலாம்.

நம்பிக்கை வாக்கெடுப்பும், கட்சி தாவல் தடை சட்டமும் ; 10 முக்கியத் தகவல்கள் ;;

தமிழக சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களித்தால் அவர்கள் பதவி இழக்க நேருமா ?

சட்டம் என்ன சொல்கிறது?

  • 1985ல் உருவாகி, 2003ல் திருத்தப்பட்டது கட்சித் தாவல் தடை சட்டம்
  • கட்சியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக விலகினால் பதவி  பறிபோகும்
  • கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் பதவி பறிபோகும்
  • சட்டமன்ற / நாடாளுமன்றக் கட்சி உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைந்தால் பதவி தப்பும்
  • ரகசிய வாக்கெடுப்பா, வெளிப்படையான வாக்கெடுப்பா என்பது சபாநாயகரின் முடிவு
  • சபாநாயகரின் முடிவு இறுதியானது – ஆனால் நீதிமன்றங்கள் சில சந்தர்ப்பங்களில் மறுபரீசலனை செய்யலாம்
  • அவையில் கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தாலும்,  வாக்கு செல்லும்.
  • கொறடாவின் உத்தரவை மீறிய உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமுன் நோட்டிஸ் கொடுத்துத்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
  • மீறிய உறுப்பினர்களை சபாநாயகர் மன்னிக்கவும் வழிவகை உண்டு.
  • கட்சியிலிருந்து விலக்கப்பட்ட உறுப்பினர்களை கொறடா கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு விடையில்லை.

பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களிக்க தி.மு.க முடிவு ;;

நாளை தமிழக சட்டப்பேரவையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்க திராவிட முன்னேற்றக் கழகம் முடிவெடுத்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக அ.தி.மு.கவைச் சேர்ந்த எடப்பாடி கே. பழனிச்சாமி நேற்று பதவியேற்றார். அவரது அரசுக்கு நம்பிக்கைகோரும் தீர்மானம் நாளை தமிழக சட்டப்பேரவையில் வாக்கெடுப்புக்கு வருகிறது.

இந்த நிலையில், அனைத்துக் கட்சிகளும் தங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை இன்று நடத்தின.

குடும்ப ஆட்சிக்கு எதிராக அழுத்தம் தரும் மக்களைக் கைது செய்யக்கூடாது – ஓ.பன்னீர்செல்வம்

`ஓ.பி.எஸ். ஆதரவாளர்களின் தொலைபேசித் தொல்லை தாங்க முடியவில்லை’

தி.மு.க.வின் சட்டமன்றக் கூட்டம் அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக தி.மு.க. முடிவுசெய்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், “அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. அந்த ஆட்சிக்கு எதிராக வாக்களிப்போம்” என்று தெரிவித்தார். மேலும், ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதை தி.மு.க. வரவேற்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கியிருப்பது குறித்தும் குதிரை பேரம் நடப்பது குறித்தும் தமிழக மக்கள் அனைவரும் கேள்வியெழுப்ப வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன?

தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைமையகமான சத்யமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துகள் கட்சித் தலைமைக்கும் மாநிலப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிற்குத் தெரியப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர்கள் நாளை காலைக்குள் முடிவைத் தெரிவிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

 

இதற்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க முடிவுசெய்திருப்பதாக திருநாவுக்கரசர் பெயரில் உள்ள ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அது தன்னுடைய ட்விட்டர் பக்கமே இல்லையென்றும் தனக்கு ட்விட்டரில் இயங்கத் தெரியாது என்றும் திருநாவுக்கரசர் கூறினார்.

இது தொடர்பாக, அவரது பெயரில் வந்த ட்விட்டர் செய்தி தற்போது அகற்றப்பட்டுள்ளது.

தற்போதைய சட்டப்பேரவையில் தி.மு.கவிற்கு 89 உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சிக்கு 8 உறுப்பினர்களும் உள்ளனர்.

தற்போதைய அரசு, நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வெற்றிபெற 118 வாக்குகளைப் பெற வேண்டும்.

 

NOT JUST A NEWS CHANNEL ….ITS A KNOWLEDGE HUB