அகர்வால் கண் மருத்துவமனையின் புதிய கிளையை நடிகை கீர்த்தி சுரேஷ் திறந்து வைத்தார்

Rate this post

சென்னை வேளச்சேரியில் அகர்வால் கண் மருத்துவமனையின் 75 ஆவது கிளை துவக்கப்பட்டுள்ளது. இதில் திரைப்பட நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், மருத்துவமனை துவக்க விழாவிற்கு தன்னை அழைத்து மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். வறுமை கோட்டிற்கு கீழே உள்ள நூறு நபர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்ற மருதுவமனையின் சேவையை பாராட்டுவதாக கூறினார். கண் தானத்தின் அவசியத்தை வலியிறுத்தி பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், தானும் கண் தானம் செய்யவிருப்பதாகவும், அனைவரும் கண் தானம் செய்ய முன்வர வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*