குறுகிய செய்தி

அக்ஷய திருதியை ஸ்பெஷல்

அட்சய_திருதியைக்கு #காரணகர்த்தா #ஆதிசங்கரர். ஓர் ஏழைப்பெண்ணின் வீட்டு வாசலில் நின்று 

“#பவதிபிட்சாம்தேஹி’ என்று பிட்சை கேட்டார். அந்தப் பெண் தன்னிடமிருந்த உலர்ந்த நெல்லிக்கனியைத் தானமாகக் கொடுத்தார்.

ஏழைப் பெண்ணின் இந்த #ஈகைக்_குணம் ஆதிசங்கரரைப் பெரிதும் கவர்ந்தது. இதுபோன்ற மனிதர்களிடம் செல்வம் இருந்தால்தான் செல்வத்துக்கு அழகு என்றெண்ணி, மகாலட்சுமியைத் துதித்து #கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார்.

இதில் மகிழ்ந்த மகாலட்சுமி, இவர், 19-ம் ஸ்லோகம் பாடியபோது, அந்த ஏழைப் பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனியை மழையாகப் பொழிய வைத்தாள். கனகதாரா ஸ்தோத்திரம் பாடிய நாள்தான் அட்சய திருதியை!

அட்சய திருதியை என்பது செல்வ வளம் தரும் நாளாகப் போற்றப்படுகிறது. #அன்றையதினம் #மகாலட்சுமி
அனைவரின் #வீட்டிற்கும் வருகிறாள் #என்பதுஐதீகம்!

அன்றைய தினத்தில் நாம் செய்யும் நற்செயல்கள் எல்லாம் ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்று பவிஷ்யோத்ர புராணம் கூறுகிறது.

அன்றைய தினம் பொருள் வாங்குவது ஒருபுறம் இருந்தாலும், #அன்றுசெய்யப்படும் #தானங்கள், பல ஆயிரம் #பலன்களைப் பெற்றுத்தரும்.

நம் சக்திக்கு ஏற்ப தானம் செய்தால் போதும். வீட்டில் #சமைக்கும் #சாதத்தில் #தயிர்ஊற்றிப் பிசைந்து #இயலாதோருக்குக் #கொடுங்கள். #ஒருவருக்குக்கொடுத்தால் #கூடஆயிரம் பேருக்கு #கொடுத்தப் புண்ணியம் #கிடைக்குமாம்.

*என்றும் அன்புடன்,
*Rajesh

Comment here