வானிலை

அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 39 பேர் பலி

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 28 மாவட்டங்களில் 52 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4,600 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் 11 நதிகளில் வெள்ள நீர் அபாய கட்டத்தை தாண்டி செல்கிறது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில் 380க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். புகழ்பெற்ற காசிரங்கா தேசிய வனவிலங்குகள் பூங்கா 90 சதவீதம் வெள்ள நீரில் மிதக்கின்றன.

அசாமிற்கு நிவாரண நிதியாக முதற்கட்டமாக ரூ.251.5 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அசாமில் மழை வெள்ளத்திற்கு 37 பேரும், நிலச்சரிவில் சிக்கி 2 பேரும் என 39 பேர் பலியாகி உள்ளனர் என அசாம் பேரிடர் மேலாண்மை கழகம் அறிவித்துள்ளது.

Comment here