உலகம்பொது

அணு ஆயுத சப்ளை குழு: இந்தியாவுக்கு பின்னடைவு

அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இணைய இந்தியா முயற்சி செய்து வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. சீனா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட 5 நாடுகள் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தியா என்.எஸ்.ஜி.,யில் சேர சீனா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என நேற்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியிருந்தார். இன்னும் சில நாட்களில் சியோல் நகரில் நடக்கும் என்.எஸ்.ஜி., தொடர்பான கூட்டத்தில், இந்தியா சேர்வது குறித்து விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அணு சக்தி சப்ளை குழு நாடுகள் பிரிந்து கிடக்கிறது. மேலும் புதிய உறுப்பினர் சேர்ப்பது குறித்து ஆலோசனை இல்லை. இது குறித்து இப்போது விவாதிக்க முடியாது. சீயோலில் நடக்கும் கூட்டத்தில் என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினராவது குறித்து விவாதம் நடைபெறாது என சீனா கூறியுள்ளது.

இதனால் இந்தியா நம்பி இருந்த விஷயத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது .

Comment here