அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இசைத்துறைமாணவர்களின் சிறப்பு வாய்ப்பாட்டு மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சி :

????????????????????????????????????
Rate this post

                                    அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இசைத்துறையில் நவராத்திரி விழாவிற்காக இசைத்துறையினைச் சேர்ந்த மாணவ மாணவியரின் சிறப்பு வாய்ப்பாட்டு மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சி இராணி சீதை அரங்கத்தில் அக்டோபர் 13ஆம் தேதி நடைப்பெற்றது. வாய்ப்பாட்டு நிகழ்ச்சியினை இசைத்துறை வாய்ப்பாட்டு மாணவர்கள் கர்னாடக இசைக்கச்சேரியினை அளித்தார்கள். பரத நாட்டிய நிகழ்ச்சியினை பரதக்கலை மாணவ மாணவிகள் அரங்கேற்றினர். நிகழ்ச்சியினை நுண்கலைப்புல முதன்மையர் முனைவர்.K. முத்துராமன் அவர்கள் தலைமையேற்று நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகஉலகப் புகழ் பெற்ற பரத நாட்டிய மேதை வழுவூர் ராமையாப்பிள்ளை அவர்களின் பேரனும், வழுவூர் சாம்ராஜ் அவர்களின் மகனுமான பழனியப்பன் அவர்கள் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு ஆசியும் அறிவுரையும் வழங்கினார். இசைத்துறையின் தலைவர் முனைவர். T.அருட்செல்வி, பேராசிரியர்கள் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியினை இசைத்துறையின் உதவிப்பேரசிரியர்கள் A.K.P.பாலமுருகன் மற்றும் N.சோமசுந்தரம் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*