தமிழகம்

அதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்

உலகத்திலே எத்தனையோ கோயில்களுக்கு நாம் சென்று இருப்போம் ஆனால் அதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம் (கோயில்) என்றால் அது சிதம்பரத்தையே சேரும். ஏனென்றால் இங்கே ஆலயம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பிறகு மிகமிக அற்புதங்களும்,அதிசயங்களும் காணப்படுகிறது. அதன்படி நம்முடைய இந்து மதத்தின் மூலம் வேர் வேதம். வேதத்தின் உடைய அடிப்படையிலேயே இந்த உலகம் இயங்குகிறது . அப்படி இயங்கக்கூடிய இந்த உலகத்தை ஸ்ரீ நடராஜ பெருமான் எப்படி ஆட்டி வைக்கிறார் தானும் ஆடி உலகத்தையும் ஆட்டி வைக்கக்கூடிய அந்தக் காட்சியை காண கண் கோடி வேண்டும். முதலாவதாக ஆலயத்தினுடைய சிறப்புகளை தெரிந்து கொள்வோம். வேதத்திலே ஈரேழு 14 லோகங்கள் உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது . அதன்படி மேல் ஏழு லோகத்திலே கடைசியாக உள்ள லோகம் சத்தியலோகம். அது பிரம்மாவினு டைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது . அதற்கும் மேலே சொர்க்கம் உள்ளது சொர்க்கம் என்பது இந்திரன் போன்ற தேவர்களை கொண்ட ஒரு சபையாகும் . அந்த சபையிலே 4 தேவ கன்னியர்கள் (அப்சரஸ் ) . அவர்களுக்கு ரம்பை, ஊர்வசி,மேனகா , திலோத்தமா என்று பெயர் . நால்வர் நடனமாடும் பெண்களாக இருக்கிறார்கள் அப்படி அந்த தேவலோகத்தை கடந்து நாம் இறைவனை அடைய வேண்டும். இறைவனை அடைவதற்கு தேவலோகத்தை கடக்க வேண்டும். அதன்படி நம்முடைய சிதம்பரம் கோயிலில் நடராஜரு டைய இருப்பிடம் சித்சபை ( பொற்சபை) என்றும் அதனுடைய அருகிலேயே எதிர் அம்பலம் என்று அழைக்கப்படக்கூடிய கனகசபை அமைந்திருக்கிறது. இந்த இரண்டு சபைகளும் உலகத்திலேயே ஒரு அதிசயமான அமைப்பாக அமைந்திருக்கிறது. அந்தப் பகுதிக்கு செல்வதற்கு முன் நம்முடைய முன்னோர்களால் அமைக்கப்பட்ட ஒரு நுழைவாயில் உள்ளது . அந்த நுழைவாயிலுடைய பெயர் குடகு அறை வாசல் என்று பெயர். எதற்காக இந்த அமைப்பை வைத்திருக்கிறார்கள் என்பதிலே தான் அதிசயமும் அற்புதமும் இருக்கிறது .அதன் ( படம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது) அதாவது அந்த வாயிலில் 4 நடன மணிகள் அதாவது ரம்பை, ஊர்வசி, மேனகை ,திலோத்தமை என்று நால்வரும் இன்றும் நடனம் ஆடிக்கொண்டும் ஆனந்த நடராஜரை ஆண்டிற்கு நான்கு முறை தரிசித்துக் கொண்டும் இருப்பது அதி அற்புதமாகும். எப்படி என்று பார்த்தால் ஆனந்த நடராஜர் ஒவ்வொரு ஆனி மாதமும் மார்கழி மாதமும் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு திருத்தேர் விழா கண்டு, ஆயிரங்கால் மண்டபத்தில் அபிஷேகம் கொண்டு சித்சபையை அடையக்கூடிய இந்தக் காட்சியை கண்டு கொண்டு இருக்கிறார்கள். இங்கே நம்முடைய மனித சிந்தனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கிறது என்ன என்றால் இறைவன் உலகத்திலேயே பக்தர்களைத் தேடி தானே வருவது தில்லை நடராஜர் மட்டும்தான். அவர் இந்த குடகு அறை வாசலை கடந்து வருவது நமக்கு பேரருளாக கிடைக்கிறது. ஏனென்றால் சொர்க்கத்தில் நடனமாடக் கூடிய பெண்மணிகள், அவர்களின் உருவங்கள், மிக நேர்த்தியாக அருமையாக ஒவ்வொரு அங்கங்களிலும் அணிகலன்களு டன் அவர்களுடைய நடன அமைப்புகளையும் அவர்களின் மேல் கிளி அமைந்திருப்பதையும் நாம் காண முடியும். அதாவது இறைவன் தன்னுடைய இருப்பிடமான கைலாசத்தை விட்டு பூலோகத்திற்கு வந்து அருள் செய்கிறார் என்பது இதன் மூலம் அறியப்படுகிறது. எல்லோரும் நடராஜரை தரிசனம் செய்வதற்கு முன்னதாக இந்த வாயிலை கடந்து தான் செல்ல வேண்டும். இதிலே அந்த சிலைகளுடைய அமைப்பை பார்த்தால் அவ்வளவு அழகாகவும் சிறப்பாகவும் இருக்கும். இதுபோன்று நிறைய அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்து இருக்கக்கூடிய இடம் இந்த ஆலயமாகும் . தில்லையில் ஸ்ரீ நடராஜரை எப்படி வழி பட வேண்டும் என்றும் சுந்தரமூர்த்தி நாயனார் எப்படி வழி பட்டார் என்றும் சேக்கிழார் பெரியபுராணத்தில் அருளி இருக்கிறார் ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் , சிந்தையே ஆக குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக , இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப்பெரும் கூத்தின், வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார் . என்று நம்மையும் மகிழ்ச்சி பெற வைக்கிறார் வளமும் நலமும் பெறுவோமாக.

Comment here