அரசியல்

அதிமுகவில் அதிருப்தியில் கட்சி நிர்வாகிகள் ஆட்சியை கலைப்போம் என MLA க்கள் மிரட்டல் ..!

Rate this post

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க உடன் கூட்டணி வைக்க 80 % அதிமுகவினர் விரும்பவில்லை இன்னிலையில் அமைச்சர் வகையறாக்கள் பாஜக ஆல் லாபம் அடைந்துள்ளதால் அவர்கள் கூட்டணிக்கு தயாரான மனநிலைக்கு வந்துவிட்டனர்.

இதை தொடர்ந்து யாரை வேட்பாளராக களம் இறக்கலாம் என்று ஆலோசனை செய்ததில் ஆள் ஆளுக்கு குண்டு போட தொடங்கினர்

அமைச்சர் MC சம்பத் மகனுக்கு கடலூர் தொகுதி

அமைச்சர் வேலுமணி அண்ணனுக்கு கோவை தொகுதி

அமைச்சர் சிவி சண்முகம் அண்ணனுக்கு கள்ளக்குறிச்சி தொகுதி

அமைச்சர் வீரமணி அண்ணனுக்கு வேலூர் தொகுதி

உத்தமர் OPS மகனுக்கு தேனி தொகுதி

சுயம்பு முதல்வர் EPS மகனுக்கு சேலம் சுற்றியுள்ள பகுதியில் ஒரு தொகுதி

என கேட்க அடிதடி மட்டும் தான் நடக்கவில்லையாம் கூட்டணி கட்சிகளுக்கு போக மீதம் 20 தொகுதி மட்டுமே அதிமுக விடம் இருக்க

ஒரு புறம் தற்போது உள்ள MP க்களே மீண்டும் போட்டி இட விருப்பம் தெரிவிக்க,

ஆளும் கட்சி MLA க்கள் தங்கள் உறவினர்களுக்கு சீட் கொடுக்க வேண்டும் இல்லையேல் டிடிவி தினகரனுக்கு ஆதரவை கொடுத்து தினகரனை முதல்வர் ஆக்குவோம் என்று மிரட்ட,

அமைச்சர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு சீட கேட்க பெரும் துயரத்தில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கின்றார் …

இன்னிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிவு வரை காத்திருக்க வேண்டாம் வேட்பாளர் அறிவிப்பிலேயே அதிமுக தனது அடையாளத்தை இழந்து உட்கட்சி பூசலால் ஆட்சியை இழக்கும் சூழல் ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்…

Comment here