அரசியல்

அதிமுகவுடன் பாமக கூட்டணி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்

Rate this post
சென்னை : பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும்  ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படும்.
 21 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் அதிமுக போட்டியிடும் என்றும், இந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிமுக-பாமக கூட்டணி தொடர்பாக  வேலூர் மாவட்டம்  ஆம்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது;-
2009-ம் ஆண்டு தேர்தலில் தோற்றுப்போன கூட்டணி பாமக-அதிமுக கூட்டணி. அதிமுக ஆட்சியை விமர்சித்து அண்மையில் புத்தகம் வெளியிட்டுவிட்டு தற்போது அக்கட்சியுடன் ராமதாஸ் கூட்டணி  வைத்துள்ளார்.  நாட்டைப்பற்றி ராமதாசுக்கு கவலையில்லை என கூறினார்.

Comment here