அது என்ன பொன் மகன் சேமிப்பு திட்டம்…?

5 (100%) 1 vote

செல்வமகள் சேமிப்புத் திட்டம்

இந்திய அஞ்சல் துறையின் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்ட செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள திட்டம். மத்திய அரசு அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தில் 02.12.2003–க்கு பின் பிறந்த பெண் குழந்தைகள் காப்பாளர்கள் மூலம் கணக்கு தொடங்கலாம்.

குறைந்த பட்ச முதலீடாக ரூ.1000–ம், அதிக பட்சமாக ரூ.1,50,000 வரை ஒரு நிதியாண்டில் சேமிக்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூபாய் 100–ன் மடங்குகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம்.

கணக்கு தொடங்கியதிலிருந்து 14 வருடங்கள் பணம் செலுத்தலாம். செலுத்தும் தொகைக்கு வருமான வரி விலக்கு உண்டு.

2014–15 நிதியாண்டில் இக்கணக்குகளின் வருடாந்திர வட்டி விகிதம் 9.1 சதவீதம் கூட்டு வட்டி ஆகும். விருப்பத்தின் பேரில் மாதாந்திர வட்டி பெறும் வசதி உள்ளது. பெண் குழந்தையின் 18–வது வயதிலிருந்து 50 சதவீதம் வைப்புத்தொகையினை உயர்கல்விக்காகவும், திருமணத்திற்காகவும், கணக்கிலிருந்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம். 21 ஆண்டுகள் முடிந்த பின் கணக்கை முடித்துக் கொள்ளலாம்.

இன்றைய காலச் சூழ்நிலையில் உயர்கல்வி பெறுவதற்கு அதிகப்பணம் தேவைப்படுகிறது. இது போன்ற திட்டத்தினை பெற்றோர்கள் முழுமையாக பயன்படுத்தி பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

இந்த திட்டத்தினை திருமணத்திற்காக மட்டுமே பயன்படுத்தாமல் பெண்கள் கல்வி அறிவு பெறுவதற்கு பயன்படுத்த வேண்டும்.

தற்போது உள்ள சூழ்நிலையில் அஞ்சல் துறையில் சேமிப்பு வைப்பவர்களின் கணக்கு குறைந்து கொண்டே வருகிறது. இது குறையாமல் பாதுகாக்க வேண்டும். அஞ்சல்துறையில் பணிபுரிபவர்கள் அனைவரும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மக்களிடையே சென்றடைவதற்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
ஆண் குழந்தைகளுக்காக ‘பொன்மகன்’ சேமிப்புத் திட்டம்: அஞ்சல் துறை அறிவிப்பு

பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து ஆண் குழந்தைகளுக்காக பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தை இந்திய அஞ்சல் துறை தொடங்கவுள்ளது.

இது தொடர்பாக அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு உள்ளது. அத்திட்டத்தின் கீழ் இதுவரை 10 லட்சத்து 60 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆண் குழந்தைகள் பயன்பெறும் வகையிலும் சேமிப்பு திட்டத்தை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பிலிருந்து வந்தன.

அதனை மனதில் கொண்டு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள குடும்பங்களில் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் வகையில் ‘பொன்மகன் பொது வைப்பு நிதி’ என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80-சி பிரிவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாவலர் உதவியோடு பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தானாகவே கணக்கு துவங்கலாம். இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. இந்த சேமிப்பு கணக்குகளுக்கு 8.7 சதவீதம் வட்டி தற்போதைய நிதியாண்டில் வழங்கப்படும். இந்த கணக்கின் மூலம் கிடைக்கப்படும் வட்டிக்கு வரி விலக்கு உண்டு.

இந்த வைப்புநிதி திட்டத்தில் இணைய பி-பிரிவில் வரும் அனைத்து அஞ்சல் அலுவலகங்களையும் அணுகலாம். ஆண்டுக்கு ரூ.100 முதல் ரூ. 1லட்சத்து 50 ஆயிரம் வரையிலும் முன் பணம் செலுத்தலாம். இதில் கடன் வசதி மற்றும் செலுத்திய தொகையை திரும்பப்பெறும் வசதியும் உண்டு.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*