ஆன்மிகம்

அத்திவரதர் திருவிழா

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் திருவிழா இன்று அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதல் தரிசனம் செய்தனர். அதன் பின் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் தரும் அத்திவரதர் இன்று அதிகாலை 5 மணியளவில் சுப்பிரபாத சேவையுடன் தொடங்கியது நேய் வேத்தியம், காஞ்சிபுரம் இட்லி, வென்பொங்கள், சக்கரை பொங்கள், லட்டு, ஜீலேபி போன்ற பொருட்களால் நேய்வேத்தியம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதன் பின் மகா தீபாராதனை செய்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதல் தரிசனம் செய்து பின் பொதுமக்கள் தரிசனம் அனுமதிபக்கபட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 3 முன்னறே தரிசனம் செய்ய சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .இதனை தொடர்ந்து 38 நாட்கள் சைனகோலத்திலும், 10 நாட்கள் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பாளர்.

Comment here