அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்…

Rate this post

இந்த முடிவுவை எடுத்த Kerala Devaswom Recruitment Board (KDRB) க்கு ஒரு இந்து பெண் சன்யாசியான என்னுடைய சில கேள்விகள்…

1. Kerala Devaswom Recruitment Board (KDRB) என்பது இந்து மதத்திற்கு மட்டும் தானா?

ஏன் கிருஸ்த்துவ மதத்திற்கு, முஸ்லிம் மதத்திற்கு இப்படி ஒரு அமைப்பு உருவாக்கப்படவில்லை?
எல்லா சர்ச்சுகளுக்கும், எல்லா மசூதிகளுக்கும் ஏன் இது போன்ற அரசு அமைப்பு உருவாக்கப்படவில்லை?

2. எல்லா ஜாதியினரும் அர்ச்சகராலாம் என்பது இந்து மதத்திற்கு மட்டும் தானா?
ஏன் கிருஸ்த்துவ மதத்தில், முஸ்லிம் மதத்தில் இதை Kerala Devaswom Recruitment Board (KDRB) நடைமுறைபடுத்தவில்லை?

3. தீட்சை பெற்ற சிவாச்சாரியார்கள், பிராமணர்கள் என்பவர்கள் இந்து மதத்தில் ஒரு ஜாதி பிரிவை சேர்ந்தவர்கள். இவர்கள் இந்து மதத்தை வாழ்பவர்கள், வாழ வைப்பவர்கள். இவர்கள்தான் மதபோதகர்களாக, அர்ச்சகர்களாக இருக்க வேண்டும் என்று ஆகமத்தில் உள்ளது. இது இந்து மதத்தின் கொள்கை. இந்த கொள்கையை, விதிமுறையை ஆகமங்களும் சாஸ்த்திரங்களும் தந்துள்ளது.

இந்து மதத்தின் இந்த விதிமுறைகளை மீறி அனைவரையும் அர்ச்சகர்களாக்கும் துணிச்சல் அரசுக்கு உண்டென்றால், அதேபோன்று
– சியா முஸ்லிம் ஜாதி பிரிவை சேர்ந்த ஒருவரை சன்னி பிரிவின் மத போதகராக நியமிக்கலாமே. முஸ்லிம் மதத்தின் கொள்கையை அவதூறு செய்ய Kerala Devaswom Recruitment Board (KDRB) முடியுமா?

– பெந்தகோஸ்த் ஜாதி பிரிவை சேர்ந்த ஒருவரை ரோமன் கத்தோலிக்க மத போதகராக நியமிக்கலாமே. கிருஸ்த்துவ மதத்தின் கொள்கையை அவதூறு செய்ய Kerala Devaswom Recruitment Board (KDRB) முடியுமா?

இந்து மதத்தின் கொள்கைகளை மீறும் அந்த பொதுவுடைமை கொள்கையை யார் இவர்களுக்கு அளித்தது?…
நன்றி….

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*