உலகம்

அன்பு-க்கு பதிலாக இலவச ஐஸ்கிரீம்! – இது நியூயார்க் செய்தி!

Rate this post

இன்றைய அவசர உலகில் ஒருவர் இன்னொருவருடன் மனம் விட்டு பேசக் கூட நேரமில்லை . சொந்த பந்தங்களுடன் கூட நல்லது , கெட்டது என்று ஒன்றும் பேச முடியாத நவீன உலகில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் . அன்பு என்பது ஒரு வழிப்பாதை அல்ல., இது பல வழிகளில் இருந்து வரும். ஆனால், மனம் விட்டு பேசாததால்தான், அன்புக்கு பதிலாக பிரச்சனைகள்தான் எழுகின்றன. இப்படியான காலக்கட்டத்தில் அன்புக்காக ஒரு நிறுவனம் இலவசமாக ஐஸ்கீரிம் தருகிறது என்றால் அதனை நம்ம முடிகின்றதா? ஆனால், அவ்வாறு ஒரு நிறுவனம் வழங்குகிறது.

ஆம்.. வருடத்தில் ஒரு நாள் இலவசமாக கோன் ஐஸ்கிரீம் விநியோகிப்பதைக் கடந்த நாற்பது ஆண்டுகளாக வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது ‘பென் அண்டு ஜெர்ரி’ நிறுவனம். அப்படியாக, 2018-ம் ஆண்டுக்கான ‘ஃபிரீ கோன் டே’வைச் சில தினங்களுக்கு முன்பு கொண்டாடியது.

இந்த இலவசம் எதற்காக என்று கேட்பவர்களுக்கு, ஒரு பெட்ரோல் பங்கை ஐஸ்கிரீம் கடையாக 1978-ல் மாற்றிய போது தங்களுடைய அன்பையும் ஆதரவையும் அள்ளித் தந்த இந்த ஊர் மக்களுக்கு எங்களுடைய நன்றியை இப்படிச் செலுத்துகிறோம் என்று பதில் அளிக்கிறது இந்நிறுவனத்தின் இணையதளம்.

கடைகளை நியூயார்க் நகரில் திறந்து வைத்திருந்தாலும் ‘பென் அண்டு ஜெர்ரி’ நிறுவனம் இன்றுவரை ஐஸ்கிரீம் தயாரிப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் வெர்மாண்ட் மாகாணத்தில் தொடங்கிய ஒரு தொழிற்சாலையில் தான்.சிறிய வளாகத்தில் இயங்கிவரும் இந்த ஐஸ்கிரீம் தொழிற்சாலைதான் 40 சதவீதம் அமெரிக்கர்களைத் தன்னுடைய ஐஸ்கிரீமால் உருக வைத்திருக்கிறது.

இதில் என்ன விஷேசம் என்றால் இந்தத் தொழிற்சாலையைப் பொதுமக்கள் எந்நேரமும் பார்வையிடலாம். இதனிடையே டாலர் தேசமாக இருந்தாலும் வருடா வருடம் இந்த இலவச ஐஸ்கிரீமுக்கும் ஐஸ்கிரீம் சுற்றுலாவுக்கும் அமெரிக்க மக்கள் அலைமோதுகின்றனர். இன்ஸ்டாகிராமிலும் #FreeConeDay என்ற ஹேஷ் டேக்குடன் ஐஸ்கிரீம் ஒளிப்படங்கள் குவிந்து கிடப்பதை இப்போதும் காணலாம்.

ஹூம்ம். அன்பைக் காட்ட ஃப்ரீ ஐஸ்கிரீம்- கூட நல்லாதான் இருக்குது

Comment here