Sliderஆன்மிகம்

அன்பே வடிவான அம்பிகை ஏன் கோபம் கொண்டு உக்கிரகாளியாக அங்காளியாக மாறினாள் ?

 

சற்றே பார்ப்போமா…

ஒரு சமயம் சிவனுக்கும் சக்திக்கும் நாட்டிய போட்டி ஏற்பட்டது… முதலில் விளையாட்டாக ஆரம்பித்தது பிறகு தீவிரமானது.

போட்டி மும்மறமானது.. சிவனின் அத்தனை முத்திரை அபிநயத்தையும் அம்மையும் முத்திரை பதித்தாள் .. ஒருவருக்கு ஒருவர் ஈடாக சுழன்றாடினர்.

அப்போது சிவனின் ஒரு காது குழை கழன்று கீழேவிழுந்தது.. சிவன் அந்த குழயை நாட்டியத்தை நிறுத்தாமல், வலதுகாலால் எடுத்து இடது தோள்வழியாக தன் வலது காதில் அணிவித்துக் கொண்டார்..

இதையும் ஒரு நாட்டிய முத்திரை என நினைத்து அம்பிகை தனது காலை சற்றே உயர்தினாள்..
அனைவரும் கூடி இருந்த சபையில் காலை தூக்கியதும்
வெட்கப்பட்டு அன்னை நாணி நின்றாள்..

உடனே ப்ரம்மா அன்னை அந்த முத்திரை ஆட முடியாத காரணத்தால் சிவனே வென்றதாக அறிவித்தார்..

அன்னை கோபமுற்று தன்னை மறந்து நாட்டியமாடினாள்… அவளின் கோபத்தினால் அவள் உடல் கருத்து அன்னையின் வடிவம் விகாரமாயிற்று..

அன்னையின் உக்கிர ஆட்டத்தை தாங்காமல் ஈரேழு பதினான்கு உலகங்களும் மயங்கி விழுந்தன..
அன்னையின் ஆட்டத்தை சிவனைதவிர யாராலும் தாங்கமுடியாது என்ற காரணத்தால் சிவன் அந்த
மயங்கிய சவங்களுக்கு நடுவே தானும் மயங்கியது போல் கிடந்தார்..

சிவனின் மீது அன்னை நடமாடினாள்.. சிவன் குழந்தையின் குரலில் அழ ஆரம்பித்தார்..
குழந்தையின் அழுகுரலை கேட்ட அன்னை தாய்மை உணர்வு மேலிட கீழே குனிந்து பார்த்தாள்…

கீழே கிடப்பது தன் கணவன் என உணர்ந்த அவள்
அட டா கணவன் மீதே கால் வைத்து விட்டோமே என நாக்கை வெளியே நீட்டிக் கடித்தாள்..

இதுதான் காளி நாக்கை வெளியே நீட்டி இருப்பதன் அர்தம்..

அன்னை கோபம் மாறினாலும் அந்த விகாரமுகம் மாறவில்லை.. தன் உருவை மறைத்து பாம்பு உரு எடுத்து புற்றினில் போய் ஔிந்து கொண்டாள்..

சிவன் அன்னையின் பழய அழகு முகம் வருவதற்கு பரிகாரம் , அவளை வணங்க வரும் பக்தர்களின் துன்பத்தை நீக்கும் போது மெள்ள மெள்ள அன்னையின் அழகு முகம் திரும்ப வரும் என கூறினார்..

அன்னை அங்காளியாக புற்றினில் எல்லோருக்கும் அருளை வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறாள்…

Comment here