Sliderமாவட்டம்

அப்துல் கலாம் அவர்களின் 87 வது பிறந்த நாளை முன்னிட்டு, கைத்தறி மற்றும் நெசவு தொழில் வளர்ச்சி அடைய விழிப்புணர்வு

பாரத ரத்னா  விருது பெற்ற மறைந்த அப்துல் கலாம் அவர்களின் 87 வது பிறந்த நாளை முன்னிட்டு, கைத்தறி மற்றும் நெசவு தொழில் வளர்ச்சி அடைய விழிப்புணர்வு ஊர்வலத்தை விவசாயிகள் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர் .
————————————————————
இந்தியாவெங்கும்  பாரத ரத்னா விருது பெற்ற மறைந்த அப்துல் கலாம் அவர்களின்  பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் விவசாயிகள்  சேர்ந்து இயற்கை வளங்களை பாதுகாக்கவும் விவசாயம் மற்றும் கைத்தொழில் வளர்ச்சி பெறவும்  ஊர்வலம் வந்தனர் . இந்த பேரணி காஞ்சிபுரம் தேரடியில் இருந்து தொடங்கி  நகராட்சி வந்து அடைந்தது . இதில் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Comment here