உலகம்

அப்பாவிகளைக் கொன்று குவித்த மனித வெடிகுண்டுக்கு கண்ணீர் மல்க ஓர் கடிதம்

(1) நாங்கள் பூசை பலிக்காக சேரும் சரியான நேரத்தை அறிவதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பாராட்டுகள்.

(2) நாங்கள் ஞாயிற்றுக்கிழமை ஆனால் எங்கள் ஆண்டவரை ஆராதிக்கவும் விண்ணப்பிக்கவும் கூடிவருகிறவர்கள் என்பதை அறிந்து வைத்திருந்ததற்கும் பாராட்டுக்கள்.

ஆனால் ஒன்று, நீ அறிந்திராத சிலவுண்டு. அதினால் உன்னையறியாமலே எங்களில் பலரை இரத்தசாட்சிகள் ஆக்கியிருக்கிறாய்.

ஆம், நீ செய்திட்ட ஒரே செயலினால் பலரும் திடீரென உயர்நிலைக்கு சென்றுவிட்டார்கள். இதனால் அவர்கள் மீண்டும் உயிர்த்தெழுகையில் நீதியும் அர்ப்பணமும் உள்ளவர்களாய் நிற்கப்போகிறார்கள்.

மேலும் தங்கள் இன்னுயிரை நீத்த அவர்களுடைய உதடுகள் கடைசியாய் முணுமுணுத்தது கடவுளை உயர்த்தும் துதியாகும். அது கிறிஸ்தவர்களில் பலரும் விரும்பி காத்திருக்கும் பாக்கியமாகும். அத்தகைய அரிய வாய்ப்பை நீ ஏற்படுத்திக் கொடுப்பாயென்பது உனக்கே தெரிந்திருக்காது.

அதுமாத்திரமல்ல, அத்தனை பேருக்கும் உன்னுடைய ஒரே செயல் சொர்க்கத்தின் வாசலைத் திறந்துவிட்டதையும் நீ அறியவில்லை.

கிறிஸ்தவம் எவ்வாறு அயலாரை தயக்கமின்றி வரவேற்கிறது என்பதையும் எங்கள் இல்லத்துக்கும் மேலாக நாங்கள் மதிக்கும் தேவாலயத்தினுள் உன்னைப் போன்றவர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்பதையும் கூட நீ உன் செயலால் நிரூபித்திருக்கிறாய்.

எங்கள் ஆலயங்களுக்கு பூட்டுக்களோ கதவுகளோ பாதுகாப்பு சாதனங்களோ கிடையாது, நாங்கள் அனைவரையும் எங்களில் ஒருவராக வரவேற்று ஏற்றுக்கொள்கிறோம் என்பதை உலகுக்கு எடுத்து காட்டியதற்காகவும் உன்னை நாங்கள் பாராட்டவேண்டும்.

படுகாயமுற்று ஸ்டெச்சரில் தூக்கிச் செல்லப்படுவோரும் தங்கள் ஆள்காட்டி விரலை மேல்நோக்கி உயர்த்தி காட்டி ஆண்டவர் இயேசுவில் வைத்துள்ள தங்கள் மாறாத விசுவாசத்தைக் காண்பிக்கும் வலிமையான படங்களால் உலகமே வியந்துபோக உதவியதற்காகவும் உன்னை பாராட்டியே ஆகவேண்டும்.

அனைத்து சபைகளும் உலக அரசுகளும் சமுதாயமும் எங்களோடு இணைய உதவியதற்காகவும் உன்னைd பாராட்டவேண்டும்.

எண்ணற்ற எம் தேசத்து குடிகள் ஒவ்வொருவரும் சமய வேறுபாடின்றி தங்கள் கைகளில் மலர்களோடு வந்திருந்து எங்களுக்கு ஆறுதலும் அன்பும் சமாதானமும் செய்தமை உன்னால் தான் நடந்தது. அதற்காகவும் உன்னை பாராட்டுகிறோம்.

அத்தனை இதயங்களும் நொறுங்கி உலகமே கண்ணீர் சிந்தினாலும் அத்தனை பாதிப்புகளுக்கும் மத்தியில் நீ உன் செயலால் எல்லோரையும் ஒன்றாய் இணைத்ததால் எங்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் ஏற்பட்டது. அதற்காக உன்னை பாராட்டுகிறோம்.

அடுத்து வரும் வாரங்களில் நீ மிகவும் வெறுத்த அதே இடத்துக்கு மேலும் பலரும் கூடிவந்து மரித்தும் பேசுகிற எங்கள் சகோதர சகோதரிகளின் விசுவாசத்தினால் பெலப்படுவார்கள்.

வரும் வாரங்களில் இதுவரையிலும் தேவாலயத்தினுள் வந்திராத அல்லது அறிந்திராத புதிய நண்பர்களும் எங்கள் ஆலய வளாகத்தினுள் புத்தம்புது மலர்களுடனும் புகழுரை கடுதாசிகளுடனும் வரப் போவதும் உன் செயலால்.

எங்களை துன்புறுத்தி சந்தோஷப்படும் உன் தீய எண்ணம் ஒருவேளை நிறைவேறியிருந்தாலும் நீ எங்களில் ஏற்படுத்த விரும்பிய கசப்புணர்வு அச்சம் பிரிவினை ஆகியவற்றில் தோற்றுப்போனாய்.

இத்தனை திட்டமிட்டு தீர்க்கமாய் யோசித்து நீ செய்தவற்றின் பலனாக நீ ஏற்படுத்த விரும்பிய பிரிவினைக்கு பதிலாக சமய சார்பற்று அனைத்து தரப்பு மக்களும் இணைந்தே இருப்பதனால் உன் முயற்சிகள் அனைத்தும் படுதோல்வி அடைந்திருக்கிறது.

**எனவே நான் மிகவும் வருந்துகிறேன் என்று சொல்லப்போவதில்லை. காரணம், உன் சகாக்கள் 100% தோற்றுப் போயிருக்கிறார்கள்.

Comment here