அரசியல்சம்பவம்

அமலாக்கத்துறை சோதனை: ரூ.86 கோடி மதிப்பிலான பங்கு முடக்கம்

புதுடில்லி:

ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக நடந்த சோதனையில் ரூ.86 கோடி மதிப்பிலான பங்குகள் முடக்கப்பட்டன.

விவிஐபிக்கள் பயணம் செய்வதற்காக ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் நடந்ததாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பணமோசடி நடந்துள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இன்று டில்லி, ஐதராபாத் மற்றும் மும்பையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து வெளிநாட்டு நிறுவனங்களின் ரூ.86 கோடி மதிப்பிலான பங்குகள் முடக்கப்பட்டன. பல ஆவணங்களும் இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். துபாய், மொரிஷீயஸ் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.86.07 கோடி மதிப்பிலான பங்குகள் முடக்கப்பட்டன. இந்த வழக்கில் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இடைத்தரகராக செயல்பட்ட மிச்சேல் ஜேம்ஸ் இந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.

Comment here