உலகம்

அமெரிக்காவில் நுழைய முயற்சித்த 220 அகதிகள் கைது

இந்த நிலையில் கவுதமாலா, ஹோண்டுராஸ், எல்சல்வடார் நாடுகளை சேர்ந்த 220 அகதிகள் அமெரிக்காவினுள் சென்று குடியேறும் நோக்கத்தில் மெக்சிகோவுக்கு வந்தபோது பிடிபட்டனர். அவர்கள் குளிர்பானங்கள் ஏற்றி செல்வதாக கூறிக்கொண்டு, சியாபாஸ் மாகாணத்துக்குள் வந்த லாரிக்குள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் அனைவரையும் மெக்சிகோ அதிகாரிகள் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்கள் அனைவரும் குடியேற்றத்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கடந்த மாதம்தான் சட்ட விரோதமாக அகதிகள் நுழைவதை தடுக்கிற விதத்தில் அமெரிக்காவும், மெக்சிகோவும் ஒப்பந்தம் போட்ட நிலையில் மெக்சிகோவில் 220 அகதிகள் பிடிபட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Comment here