உலகம்

அமெரிக்காவில் 4 இந்தியர்கள் சுட்டுக்கொலை

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அயோவா மாகாணம் வெஸ்ட் தேஸ் மொயின்ஸ் பகுதியில் ஆந்திராவை சேர்ந்த சந்திரசேகர் சுங்காரா (வயது 44) வசித்துவந்தார். தகவல் தொழில்நுட்ப பட்டதாரியாவார். இவருடைய மனைவி லாவண்யா (41). இவர்களுக்கு 15 வயதிலும், 10 வயதிலும் 2 மகன்கள் இருந்தனர். இந்நிலையில் 4 பேரும் அவர்கள் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்களது உடலில் துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்த காயங்கள் இருந்தன. அவர்களது உடல்கள் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த ஆய்வு முடிவுக்கு பிறகே மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Comment here