விளையாட்டு

அம்ராபாலி கட்டுமான நிறுவன மோசடி: டோனி – ஷாக்‌ஷி டோனிக்கு சிக்கல் ஏற்படுமா?

Rate this post

புதுடெல்லி

அம்ராபாலி கட்டுமான நிறுவனம் தங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு வீடு கட்டித்தருவதாக கூறி ஏமாற்றிவிட்டது என்று பொதுமக்கள் பலர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த விசாரணையின் போது நிதி மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டு, அது குறித்து ஆய்வு செய்ய ஆடிட்டர்கள் குழு நியமிக்கப்பட்டது.

அதேவேளையில் அந்நிறுவனத்தின் விளம்பர தூதரக இருந்த டோனியும், அந்நிறுவனம் தனக்கான விளம்பர ஒப்பந்தத்திற்கான பணத்தை தரவில்லை எனவும், வீடு கட்டி தருவதற்காக வாங்கிய பணத்தையும் தரவில்லை எனவும் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் நேற்று ஆடிட்டர் குழு தாக்கல் செய்த அறிக்கையில் அம்ராபாலி நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் மூலம் மிகப்பெரிய நிதி மோசடி நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அமரப்பள்ளி நிறுவனத்தின் கிளையான அம்ராபாலி மகி நிறுவனத்தின் இயக்குனராக டோனியின் மனைவியான ஷாக்‌ஷி இருந்துள்ளார். எனவே இந்த வழக்கில் அவரையும் விசாரணைக்கு உட்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment here