கோர்ட்

அரசு ஊழியர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்: ஐகோர்ட்

Rate this post

அரசு துறை ஊழியர்களும் பணி நேரத்தின் போது கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த வள்ள நாராயணன் என்பவர் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், 1986ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் தங்கள் பெயர் பட்டையை அணிந்திருக்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி ஆஷா அடங்கிய அமர்வு தானாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பெயர் பட்டை அணியும் பழைய நடைமுறைக்கு பதிலாக தற்போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Comment here