உலகம்

அரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் மேற்கொண்ட புதிய முயற்சியும் தோல்வி

Rate this post

வாஷிங்டன் : சட்டவிரோத குடியேறிகளை தடுக்க மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு சுவர் அமைப்பதற்கு 570 கோடி டாலர் நிதி ஒதுக்கும்படி அதிபர் டிரம்ப் நாடாளுமன்றத்தில் முறையிட்டார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டிரம்ப் கேட்ட தொகையை அளிக்க மறுத்துவிட்டனர்.

அதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவில் முக்கிய அரசு துறைகள் முடங்கின. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் சம்பளமின்றி தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, எல்லை சுவர் கட்டுவதற்கான நிதி கோரும் மசோதா உட்பட 2 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இரண்டு மசோதாக்களும் நிறைவேறுவதற்கான தேவையான 60 வாக்குகளை பெற முடியாமல் தோல்வியை எட்டியது. இதனால், அரசு நிர்வாக முடக்கம் அமெரிக்காவில் 34-வது நாளாக நீடித்து வருகிறது.

Comment here