கோர்ட்

அரசு வக்கீல்கள் ராஜினாமாவால் கிளம்பிய போட்டி!

தமிழக அரசின் குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினம் ராஜினாமாவை தொடர்ந்து, அரசு பிளீடர் எஸ்.எம்.சுப்பிரமணியம், கூடுதல் அட்வகெட் ஜெனரல் ஆகியோரும் ராஜினாமா செய்ய இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வழக்கறிஞர்கள் சசிகலா குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்கள் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.ராஜினாமா செய்ததற்கான காரணத்தை ராஜரத்தினம் உடனடியாக தெரிவிக்கவில்லை.

இவர் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமாரின் ஜூனியர் ஆவார். வழக்கறிஞர்களின் ராஜினாமாவை தொடர்ந்து அந்த பதவிகளை பிடிப்பதில் ஓபிஎஸ் மற்றும்இபிஎஸ் ஆதரவு வழக்கறிஞர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

Comment here