வானிலை

அருணாச்சல பிரதேசத்தில் நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு

இடாநகர்,

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. சில நொடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஜோர்ஹாட்டில் இருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.

பகல் நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இந்த நில அதிர்வு அசாமிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

Comment here