அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரத்திருவிழா இன்று கொடியேற்ற கோலாகலம்!

Rate this post

நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் ஆடிப் பூரத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 17-07 -18 தேதி வரை விழா சிறப்பாக நடைபெறும். வரும் 11 ம் தேதி காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடக்கிறது.

அருள்மிகு நெல்லையப்பர்கோயிலில் ஆண்டு தோறும் ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அம்பாள் சன்னதியில், இன்று காலை9.00 மணிக்கு மேல் 10 மணிக்குள் கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆடிப்பூரத்திருவிழா தொடர்ந்து 17 ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி  தினமும் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதில் வரும் 11 ம் தேதி பகல் 12 மணிக்கு அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் ஊஞ்சல் மண்டபத்தில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் குழந்தை வரம் வேண்டி அம்பாளுக்கு வளையல்களை காணிக்கையாக செலுத்துவர்.தொடர்ந்து அன்றைய தினம் இரவு ரிஷப வாகனத்தில் காந்திமதி அம்பாள் உட்பிரகார வலம் வரும் நிகழ்ச்சியும் திருநெல்வேலியின் 4 ரதவீதிகளில் உலா வரும் நடக்கிறது.

10ம் (17 ம் தேதி) திருநாளில் ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை அம்பாளுக்கு ஆடிப்பூர முளைப்பாரி கட்டும் சிறப்பு வைபவம் நடக்கிறது. இதில் பெண்கள் விரதமிருந்து நவதானியங்களை முளைப்பாரியாக எடுத்து வந்து, பட்சணங்களை கொண்டு காந்திமதி அம்பாளுக்கு மடி நிரப்பி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்,.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*