தொழில்நுட்பம்

அள்ளி கொடுத்த ஏர்டெல்

Rate this post

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக #AirtelThanks என்ற பெயரில் சில சலுகைகளை வழங்கியுள்ளது.
#AirtelThanks என்ற பெயரில் ஏர்டெல் நிறுவனம் தனது வாடிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சில சலுகைகளை வழங்கியுள்ளது.

இந்த சலுகைகளில் ஒரு வருட அமேசான் பிரைம், 3 மாத நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் பல ஸ்ட்ரீமிங் தளங்களின் மெம்பர்ஷிப் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.

அதோடு, ஏர்டெல் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளுக்கு ஹலோ ட்யூன் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் குறித்த விரிவான தகவல் பின்வருமாறு…

ஏர்டெல் ரூ.1099 பிராட்பேண்ட் ப்ளான்:
இந்த சலுகையில் 100Mbps வேகத்தில் 300GB டேட்டாவோடு இலவசமாக 3 மாதம் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஒரு வருட அமேசான் பிரைம் உறுப்பினராகவும் இருக்கலாம்.

ஏர்டெல் ரூ.1599 பிராட்பேண்ட் ப்ளான்:
இந்த சலுகையில் 300Mbps வேகத்தில் 600GB டேட்டாவோடு, இலவசமாக 3 மாதம் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஒரு வருட அமேசான் பிரைம் உறுப்பினராகவும் இருக்கலாம். மேலும் 1000GB டேட்டா போனஸாக கொடுக்கப்படும்.

ஏர்டெல் ரூ.1999 பிராட்பேண்ட் ப்ளான்:
இந்த சலுகையில் 100Mbp வேகத்தில் அன்லிமிட்டெட் டேட்டாவோடு, இலவசமாக 3 மாதம் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஒரு வருட அமேசான் பிரைம் உறுப்பினராகவும் இருக்கலாம்.

Comment here