இல்லறம்

 அழகும் பெண்களும்

5 (100%) 1 vote

அழகு  சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பும்  ஒரு விஷயமாகும். தனை மேருகாகக்கி கொள்வதில்  ஆண், பெண் என்ற பேதம் கிடையாது. ஆனாலும் பெண் குழந்தைகளுக்கு இல்லம் வயது முதலே  பெண் குழந்தைகளின்  பெற்றோர்களும், உறவினர்களும் சிராட்டி, பாராட்டி, அலங்கரித்து அழகாக இருக்கவேண்டும்  என்பதில்  அக்கறையாக இருப்பர். அதுவும் படிக்கும் பெண் குழந்தைகளும், கல்லூரி செல்லும் பெண்களும் வேலைக்கு செல்லும் மகளிரும்  தன்னை  அழகாக்கிக்கொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருப்பர். இதற்காக இவர்கள் உபயோக்கிக்கும் பொருட்கள் செயற்கையாய் தயாரிக்கப்படும் ரசாயணம் கலந்த பொருட்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். பெண்கள் அன்றாடம் பயன்படுத்தும் நகபூச்சி, கண் மை, லிப்ஸ்டிக், ஐக்கானிக் காஜல், ஷாம்ம்பூ, ஹேர்ஸ்ப்ரே, மஸ்காரா, ஐபுரோபென்சில், ஹேர் கலரிங், போன்ற  இயற்க்கைக்கு  மாறான ரசாயணம்  கலந்த  பொருட்களை பயன்படுத்துவதால் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு நோயை உண்டாக்குகின்றன. சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வியாதியை உண்டாக்குகின்றன. இன்று  வெளி நாட்டு நிறுவனங்களின் பல் வேறு  வகையான பொருட்கள்  பலகோடி ரூபாயிக்கு விற்ப்பனையாகின்றன. ஆனால், முந்தைய காலங்களில் பெண்கள் தலைக்கு வாரத்திற்கு ஒருநாள்  எண்ணெய் தேய்த்து தலை முழ்குவார்கள்.  இதற்காக  அவர்கள் பயன்படுத்துவது இயற்கையாக கிடைக்கும் மூலிகை பொருட்கள் தான் அவை சீயக்காய்,வெந்தயம், பாசிபருப்பு, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள்  தயாரிக்கப்படும் உலர்ந்த ரோசபூக்கள், ஆரஞ்சி  பழத்தோல்கள் ஆகியவற்றை கொண்டு அரைத்த மாவை கொண்டு தங்கள் உடலில்   தேய்த்து குளிப்பது வழக்கம். ஒருவரது நிறம், அழகு போன்றவை அவரது பிறப்பினால் வருபவை. எவ்வளவு கிடைத்ததோ அவ்வளவுதான்  என்ன நிறைய முயன்றால் கொஞ்சம் கூட்டலாம், மாற்றலாம்மற்றபடி இயற்கையில் அமைத்தது அமைந்ததுதான். சமீபத்தில் ஒரு தொலைகாட்சியில் இருமாநில பெண்களில் அழகை ஒப்பிட்டு விவாத நிகழ்ச்சி நடத்துவதற்கு  எதிராக  பலரும் கருத்துதெரிவிக்க , அந்த நிகழ்ச்சியே ரத்து செய்யப்பட்டது.

பெண்கள் இப்படி இருப்பது தான் அழகு என்று சொல்லப்படும் வரையறை இன்று நேற்று முடிவானதல்ல. வரலாறு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்தே அந்த வரையறைகளும் ,இலக்கணங்களும்  தொடங்கிவிட்டன. வில்புருவமும், கயல் கண்களும்,  மெல்லிடையும், செவ்விதழ்களும், சங்குகழுத்தும், இன்னும் சில லட்சணங்களும் பொருந்திய பெண்களே அழகு என்கிற எல்லைக்குள் கால் வைக்க முடியும். புராண காலமும், சங்க காலமும், முடிந்து அடுத்து வந்த தலைமுறையினர்  தங்கள் பங்குக்கு இந்த லச்ன்களில் சிலவற்றை கூட்டவோ குறைக்கவோ  செய்ய ,பெண்ணுக்கான அழகு விதிகள் காலம் தோறும் மாற்றியமைக்கப்பட்டு, நவீனபடுத்தப்பட்டும்  வருகின்றன. ஆனால் எல்லா காலங்களிலும்  நிறமும் மென்மையும் வாளிப்பான உடலுமே பெண்மையின் முக்கிய அடையாளங்களாகக்  கற்பிக்கபடுகின்றன.

ஆண் பெண் யாராக இருந்தாலும் ஒவொருவருக்கும் தனித்த உடல்வாகும் தோற்றமும் உண்டு.  இவற்றில் இது அழகு என்றோ இது அசிங்கம் என்றோ எதையும் வகைபடுத்த யாருக்கும் உரிமையில்லை. நிறமும் அவய அமைப்புகளும் வழி வழியாக வருபவை அதில் நாமே விரும்பித் தேர்தெடுக்கவோ மாற்றியமைக்கவோ என்ன இருக்கிறது.எதையும் அதன் இயல்புடன் ஏற்று கொள்வதுதானே இயற்க்கை. ஆனால் பெண்கள் விஷயத்தில் அது நடப்பதே இல்லை. எப்போதும் ஒப்பிடு இருந்தபடியே உள்ளது. ஆண்கள் பார்த்து ரசிக்க வேண்டிய , நுகரவேண்டிய ஒரு பண்டமகவே பெண்கள் பெரும்பாலும் கருதபடுவதே  இதற்கு அடிப்படை.  அதே நேரம் , புறதோற்றதிற்க்காக ஒரு ஆண் கவலைப்படும்  தருணங்கள் மிக குறைவு. பெண்ணோ எப்போதும் தன புறத்தோற்றம் குறித்த நினைப்புடன் இருக்க வேண்டிய கட்டாயதுக்கு தள்ளப்படுகிறார்கள்.  சிறுவர்களின் அலங்காரம் கால்சட்டை, மேல்சட்டையோடு முடிந்து விடுகிறது. சிறுமிகளுக்கோ உச்சந்தலையில் தொடங்கி உள்ளங்கால் வரை நீள்கிறது. அப்படி அலங்கரித்து கொள்வது தான் லட்சணம் என்று குழந்தை பருவம் முதலே  பெண்களின் மனதில் திணிக்கபடுகிறது. எப்போதும் தன்னை காட்சி பொருளாக்கி கொள்ளவேண்டும்.  என்பது போன்ற சிந்தனைகள் பெண்களின் மனதில் ஆழமாக வேரரூன்றிவிடுகின்றன.

பெண்கள் நீண்ட கூந்தல் வளர்த்து அதில் பூவைப்பதும் கூட பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக தான். பெண்கள் வளர்கின்றார்கள்.ஆண்கள் கூந்தல்  வளர்ப்பதில்லை முடிவெட்டிக் கொள்கின்றனர். தங்களை செயற்கை அழகுக்கு உட்படுத்த முடியாத பெண்களும், கறுப்பாக இருக்கும் பெண்களும்,  தாழ்வு  மனப்பான்மைக்கு  ஆளாகிறார்கள். கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொயஅழகு ஆணுக்கு பெண் அழகு  அவருக்கு நான் அழகு  என்ற திரைப்பட பாடல் போல் சிலர் வாழ்க்கை அமைவதும், கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு  என்று ஏற்று கொள்வதும்   *கறுப்பே அழகு என்று கம்பீரமாக நில்லுங்கள் * என்பது சப்பைக்கட்டு இங்கு செல்லுபடியாகவில்லை  என்பது தான் நிஜம்.

எத்தனை கம்பிரமாக நின்றாலும் கறுப்புக்கு கிடைக்கும் வாய்ப்பும் வரவேற்ப்பும் அனனவரும் அறிந்ததே.  சிவப்பாக இருக்கும் பெண்களுக்குத் திருமணத்திலிருந்து வேலைவாய்ப்பு முன்னுரிமை வரை கிடைப்பதால் தான்  நம் நாட்டில் சிவப்பழகு சாதனங்கள் கோடிகளை குவிக்கின்றன, பன்னாட்டு நிறுவனங்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பட புத்தகத்தில் *வரதட்சணையின் நன்மைகள்* .என்று தரப்பட்டிருக்கும் குறிப்புகளில்  “கறுப்பாகவும் அழகில்லாமலும் இருக்கும் பெண்களுக்கு  திருமணம் ஆவதற்கு வரதட்சணை உதவுகிறது  என்பது சமுகத்தில் எத்தகைய இழிவான  நிலை உள்ளது என்பது வேதனையான உண்மை. புறத் தோற்றதைத் தான் நாம் காணமுடியும். ஆணானாலும் பெண்ணாலும்  புறத் தோற்றதை கொண்டு மதிப்பிடாமல்  மனிதநேயத்தோடு  ஆணும், பெண்ணும் அணுகவேண்டும், பழகவேண்டும், வாழ்க்கையையும் அமைத்து கொள்வதே சமுக நல்வாழ்க்கைக்கு உகந்ததாகும். பெண்களிடம் எப்போதும்  புறஅழகை மட்டும் எதிர்பார்க்கும்  ஆண் மனதின் அழுக்கு சிந்தனைகளை மறக்கடித்து புற அழகை ரசித்து  தங்கள் வாழ்வை வீணாக்கிகொள்கின்றனர்.

Comment here