இந்தியா

ஆசியாவிலேயே தூய்மையான கிராமம்

மேகாலயா மாநிலத்தில் உள்ள மவ்லின்னாங் ஆசியாவிலேயே தூய்மையான கிராமமாகும். 2007-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வீட்டிலும் முழுமையாக பராமரிக்கப்பட்ட கழிவறைகள் உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் கழிவுகளை சேகரிக்க மூங்கிலால் ஆன குப்பைத் தொட்டிகள் உள்ளன. இந்த கிராமத்தில் புகை பிடிப்பதும் ப்ளாஸ்டிக் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. குப்பைகள் குழியில் புதைக்கப்பட்டு உரமாக பயன்படுத்தப்படுகிறது.  கிராம மக்கள் ஒன்று திரண்டு பொது இடங்கள், பள்ளிகள், க்ளினிக் ஆகிய பகுதிகளை சனிக்கிழமைகளில் சுத்தம் செய்கின்றனர். காசி பழங்குடியினர் அதிகம் உள்ள இந்த கிராமத்தில் தாய்வழி ஆட்சி உள்ளது. மேலும் இது நூறு சதவீத கல்வியறிவு பெற்ற கிராமமாகும்.

Comment here