இந்தியா

ஆசிய பசிபிக் மார்டன் கேம்ஸ் போட்டிகள் இந்திய அணி

        மலேசியாவில் ஆசிய பசிபிக் மார்டன் கேம்ஸ் போட்டிகள் நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், ஜப்பான், மலேசியா, ஹங்கேரி, ஆஸ்திரேலியா, மங்கோலியா உள்பட 64 நாடுகளில் இருந்து 22 போட்டிகள் நடந்ததன். இந்திய அணியில் பெண்கள் கூடைப்பந்து போட்டியில் 35 வயதுக்குட்டபட்ட பெண்கள் மற்றும் 40 வயதுக்குட்டப்பட்ட பெண்கள் அணி சார்பில் தமிழகத்தில் இருந்து பெண்கள் பங்கேற்றனர். இதில் 35 வயதுக்குட்டப்பட்ட பெண்கள் அணி தங்கமும், 40 வயதுக்குட்ப்பட்ட பெண்கள் அணி வெள்ளி பதக்கங்கள் வென்றனர். மலேசியாவிலிருந்து விமானம் முலம் சென்னை வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 40 வயதுக்குட்டப்பட்ட அணியின் தலைவர் சுனிதா சுரையேன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் இருந்து 2 அணிகளாக மலேசியாவிற்கு சென்று விளையாடிய அனுபவம் சிறப்பாக இருந்தது. எங்கள் போட்டியை பார்த்து மேலும் பெண்கள் விளையாட முன்வருகின்றனர். இளைய வயதில் எல்லாரும் விளையாடுவார்கள். ஆனால் இந்த வயதில் பெண்கள் தங்களின் ஆளுமையை காட்ட கூடிய வகையில் இருந்தது. எங்களுக்கு பெரிய நிறுவனங்கள் உதவி செய்தால் ஊக்கமாக இருந்து பதக்கங்கள் பெற தூண்டுகோலாக இருக்கும். 3 போட்டிகளில் வெற்றி பெற்று 4வது போட்டியில் தோல்வியை அடைந்ததால் வெள்ளி பதக்கத்தை பெற்றோம் என்றார்.

35 வயதுக்குட்டப்பட்ட பெண்கள் அணி தலைவர் வித்யா சிவக்குமார் கூறுகையில்,

மாஸ்டர் கேம்ஸ் என்ற பெயரில் 22 விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. 64 நாடுகளில் இருந்து 5500 பெண்கள் கலந்துக் கொண்டனர். உலக அளவில் முதன்முறையாக நடத்தப்பட்டது. இந்தியா சார்பில் சண்டிகரில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று உள்ளோம். 35, 40 வயது பெண்களுக்காக விளையாட்டு போட்டிகளில் நடத்தப்படுவது பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது. தமிழகத்தில் மாஸ்டர் கேம்ஸ் என்ற அமைப்பு தொடங்கி தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களில் பெண்களுக்கு போட்டிகள் நடத்த திட்டமிட்டு உள்ளோம். விழிப்புணர்வு அதிகமானால் பெண்கள் அதிகமாக வருவார்கள். விளையாட்டு போட்டிகள் நடத்த மைதானம், நிதியுதவி ஆகியவற்றை தமிழக அரசு செய்து தர வேண்டும். அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள பெண்கள் பங்கேற்கின்றன. பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comment here