தமிழகம்

ஆசிரியர் தகுதி தேர்வு தேதிகளை மாற்றி அமைக்க வேண்டும்

ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் பல்கலைக்கழக தொலைத்தூர கல்வி பயில்பவர்களுக்கும் ஒரே தேதியில் தேர்வு வைத்துள்ளதால், தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, ஆகவே ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றி வைக்க தேர்வாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வை தமிழக அரசு நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற இருந்த நிலையில், நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்ற காரணத்தால், ஆசிரியர் தகுதி தேர்வு தேதி, அடுத்த மாதத்திற்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் படி ஆசிரியர் தகுதி தேர்தவு தாள் ஒன்று தேர்வு அடுத்த 8-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும், இரண்டாம் தாள் தேர்வு 9.6.2019 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதே போன்று பல்கலைகழகங்களில் தொலைத்தூர கல்வி பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகளும் அடுத்த மாதம் 8 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. பல்கலைக்கழகங்களில் தொலைத்தூர கல்வி பயில்பவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வுகளையும் எழுத உள்ளதால், இரண்டு தேர்வுகளும் ஒரே தேதியில் வருவதால், இந்த தேர்வுகளை எழுத முடியாமல் பல்லாயிரக்கணக்கோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆகவே ஆசிரியர் தகுதி தேர்வு தேதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என தேர்வாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment here