ஆன்மிகம்

ஆஞ்சநேயருக்கு – வெண்ணெய் என்ன காரணம்?

Rate this post

கந்தன்குடில் நடேசசிவாச்சாரியார்.

ராமனுக்கும் ராவணனுக்கும் நடந்த யுத்தத்தில் ஶ்ரீஆஞ்சநேயர் ஶ்ரீராமர் ஶ்ரீஇலக்குவர்களைத் தனதுதோளில் சுமந்தார் அதன் காரணமாக ராமபிரானால் போரில் எளிதில் வெற்றிபெற முடிந்தது.
தோளில் ஶ்ரீராம
ஶ்ரீஇலக்குவர்களைச் சுமந்த போது ராவணன் மற்றும் மற்ற அரக்கர்கள் விடுத்த அம்பினால் ஶ்ரீஆஞ்சநேயரின் உடலில் ரத்த காயங்கள்
{ பல இடங்களில் } ஏற்பட்டது .அப்போது ஶ்ரீராமர் தனது கரத்தால் ஆஞ்சநேயர் உடலில் வெண்ணெயை சாற்றினார்.
அதன் மூலம் ஶ்ரீஆஞ்சநேயர் உடலில் ரணங்கள் மறைந்து அவருக்கு குளிர்ச்சி ஏற்பட்டது.
முதலில் ஶ்ரீஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றியவர் ஶ்ரீராமர் ஆவார்.
எனவே இன்றும் பக்தர்கள் ஶ்ரீஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுகின்றனர்.
வெண்ணெய் சாற்றுவது மூலம் ஶ்ரீஆஞ்சநேயரை குளிர்விக்கும் அமைப்பு ஆகும்.

எனவே அனைத்து பக்தர்களும் அவரவர் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் வருடம் ஒரு முறை ஶ்ரீஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அனைத்து வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துக்கள்
நன்றி…..
🙏 வாழ்க வளமுடன் 🙏

Comment here