சினிமா

ஆடை படம் எனது படத்தின் காப்பி -பார்த்திபன் ட்விட்

அமலா பால் நடித்து வெளிவந்த ஆடை படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

ஆடை படம் ஏற்கனவே தான் இயக்கி வெளிவந்த ஒரு படத்தின் காப்பி என ட்வீட் செய்துள்ளார் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். தனது டுவிட்டில் அவர் கூறி இருப்பதாவது:-

PRANKly speaking-ஆடை படத்தின் மூலக்கருவான Prank மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆணாக பின்கூட்டியே மாற்றி 2004- ‘குடைக்குள் மழை’வந்தது.

வன்மையான கண்டனத்திற்கு + தண்டனைக்குரியது! 15 years பிறகும் ஒரு படம் உருவாக கருவான அந்த Prank-ஐ இன்னும் (eve teasing-ஐ விட கொடுமை) ஒழிக்காமல் இருப்பது. என கூறி உள்ளார்.

Comment here