விளையாட்டு

ஆட்சியரிடம் நிதியுதவி வேண்டும் சர்வதேச விளையாட்டு வீரர் .

Rate this post

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் வசித்துவரும் மாற்றுத்திறனாளி ஜோசப் சுரேஷ். இவர் சர்வதேச விளையாட்டு வீரர். இவர் கடந்த 2007ம் ஆண்டு சீனா , தைவான் ‘வீல் சேர்’ வாள் சண்டை போட்டியில் இந்தியாவிற்கு முதல் வெண்கல பதக்கத்தை பெற்றுக் கொடுத்தவர். அதேபோல் 2010ஆம் ஆண்டு சைனா காஞ்சுனில் ஆசிய அளவில் நடைபெற்ற போட்டியிலும், 2012ஆம் ஆண்டு கனடா மாண்டிரியலில் உலக அளவில் நடைபெற்ற வீல் சேர் வாள் சண்டை போட்டியில் மூன்றாவது பரிசு வெண்கலம் பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். மேலும் 2013ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற போட்டியிலும் 2014ஆம் ஆண்டு சவுத் கொரியாவில் ஆசிய அளவில் நடைபெற்ற வீல் சேர் வாள் சண்டை போட்டியிலும் கலந்து கொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்

இந்நிலையில் தற்போது வருகின்ற நவம்பர் மாதம் டிப்லிசி ஜார்ஜியாவில் நடைபெறுகின்ற உலகளாவிய வீல் சேர் வாள் சண்டை போட்டியில் கலந்து கொள்வதற்காக பாரா ஒலிம்பிக் கமிட்டி மூலம் அழைப்பு வந்துள்ளது. அதில் கலந்து கொள்வதற்கு ரூபாய் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 750 தேவைப்படுகிறது. தற்போது மிகவும் ஏழ்மை நிலையில் இவர் இருப்பதால் இவ்வளவு பெரிய தொகையை அவரால் செலுத்தி நடைபெற இருக்கக்கூடிய உலகளாவிய வீல் சேர் வாள் சண்டை போட்டியில் கலந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டு வருகிறார். இதனால் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வருகிற நவம்பர் மாதம் நடைபெறும் உலகளாவிய வீல் சேர் வாள் சண்டை போட்டியில் கலந்து கொள்வதற்கான நிதியை அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

Comment here