உலகம்

ஆட்டுக்குட்டிகளுக்கு மனிதர்களில் முகத்தை அடையாளம் கண்டுபிடிக்க முடியுமாம்!

5 (100%) 1 vote

இங்கிலாந்தில் நடந்த ஆய்வில் ஆட்டுக்குட்டிகளுக்கு மனிதர்களில் முகத்தை அடையாளம் கண்டுபிடிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆட்டுக்குட்டியின் அறிவாற்றல் திறனை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அந்த ஆராய்ச்சியின் போது, ஆட்டுக்குட்டிகள் மனிதர்களின் முகத்தை அடையாளம் கண்டுபிடிக்கும் திறன் உடையது என்று கண்டுபிடித்துள்ளனர்.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல், வளர்ச்சி மற்றும் நரம்பியல் துறை ஆராய்ச்சியாளர்கள் ஆட்டுக்குட்டிகளின் அறிவாற்றல் திறனை கண்டுபிடிக்க சோதனையை மேற்கொண்டனர். அந்த சோதனைக்காக ஆட்டுக்குட்டிகளுக்கு விசேஷ அறை ஒன்றை ஒதுக்கினர். அந்த அறையின் ஒரு பகுதியில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இங்கிலாந்து செய்தி வாசிப்பாளர் ஃபியோனா புரூஸ், நடிகை எம்மா வாட்சன், நடிகர் ஜேக் கில்லென்ஹால் ஆகியோரின் முகங்களை ஆகியோரின் முகங்களை அடையாளம் காணும் பயிற்சி செம்மறியாடுகளுக்கு வழங்கப்பட்டது.

அந்த புகைப்படங்களை சரியாக கண்டுபிடித்தால் ஆட்டுக்குட்டிகளுக்கு உணவு பரிசாக வழங்கப்படும். ஒருவேளை தவறாக கண்டுபிடித்தால் பரிசு தரப்படமாட்டாது. எந்த புகைப்படத்தை சரியாக கண்டுபிடிக்கும்போது பரிசு தரப்படுகிறது என்று பயிற்சியின்போது அவை அறிந்துக்கொள்கின்றனர். சிறிது நாட்களுக்கு பிறகு, அந்த ஆட்டுக்குட்டிகளுக்கு நடந்த தேர்வில் 1௦ முறை புகைப்படங்களை காட்டியபோது, சுமார் எட்டு முறை அவை சரியாக கண்டுபிடித்தனர்.

“ஆட்டுக்குட்டிகளுடன் அதிக நேரம் செலவிடுவோர், அதனுடைய புத்திசாலித்தனத்தை எளிதில் அறிந்துகொள்ள முடியும் என்றும், நாய் மற்றும் மனிதர்களை ஒப்பிடும்போது, ஆட்டுக்குட்டிகளுக்கு முகத்தை அடையாளம் கண்டுபிடிக்கும் அதிக திறன் உண்டு என்று இந்த ஆய்வின் தெரியவந்துள்ளது” என்று பேராசியர் ஜென்னி மார்டன் தெரிவித்தார்.

Comment here