ஆயுர்வேதம்இல்லறம்சமையல்பொதுமருத்துவம்

ஆண்மைக் குறைவை நீக்கும் ஏலக்காய்

Rate this post

மக்களின் அன்றாட உணவின் ஒரு பகுதியாக ஏலக்காயை பழக்கப்படுத்தி விட்டால், ஆண்மைக் குறைவு, பெண்மைக் குறைவு போன்றவற்றை போக்கும் மருத்துவ குணம் கொண்டது.

ஏலக்காய் மலட்டு தன்மை மற்றும் அரைகுறை விந்து வெளிபடுதலை தீர்ப்பதற்கும். குறிப்பாக, ஆண்மைக் குறைவு, பெண்மைக் குறைவும் நீக்கி குழந்தைப் உண்டாக தகுந்த உடல் நலத்தை கொடுக்கும். இது தாம்பத்திய வாழ்வில் இனிமை சேர்க்கவல்லது. ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும். ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப் பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும், ஜீரணம் அதிகரிக்கும்.

ஏலத்தை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும். ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல், தொண்டை வலி ஆகியவைகள் தீரும். ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூளை அடித்தொண்டை அழற்சி, தொண்டைக்கட்டு, உள்நாக்கில் வலி, குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்தி ஏலக்காயும், இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும். ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும். நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும். ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும்.

Comment here