Uncategorized

ஆதம் பாலம்

Rate this post

 

ஆதம் பாலம் பகுதியில் தொலையுணர்வு தொழில்நுட்பதின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொண்ட INDIAN SPACE RESEARCH ORGANISATION – ISRO வின் SPACE APPLICATION CENTER (SAC),சுமார் 30 கி.மீ நீளமுள்ள ஆதம் பாலத்தில் 1௦3 பவளத் திட்டுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கிறது. திட்டைகள் என அழைக்கப்படும் இந்தத் திட்டுகள் மணல்மேடுகளாகவே காட்சி அளிக்கின்றன.

Project: RAMESWARAM எனும் பணியின் கீழ், 2002-03 ஆம் ஆண்டுகளில் ஆதம் பாலம் பகுதியில் விரிவான ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட GEOLOGICAL SURVEY OF INDIA, இராமேஸ்வரம் தீவு சுமார் 1,25,000 ஆண்டுகளுக்கு முன் உருவாகியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. Thermo Luminescence முறையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் இங்குள்ள மணல் மேடுகள் சுமார் 600–700 ஆண்டுகளுக்கு முன் உருவாகியிருக்கக் கூடும் எனத் தெரிவிக்கின்றன.

இந்த மணல் மேடுகள் அமைந்துள்ள பூகோள அமைப்பு மற்றும் இந்த மணலில் கலந்து கிடக்கும் பவளப்பாறைத் துண்டுகள் இவற்றின் அடிப்படையிலும் இந்த மணல்மேடுகள் பவளப்பாறை திட்டுகளை மூடியுள்ள மேடுகள் என அறியலாம்.

தூத்துக்குடிக்கு அருகேயுள்ள வான் தீவில் துவங்கும் பவளத் தீவு சங்கிலித் தொடர் இராமேஸ்வரம் அருகேயுள்ள குருசடைத் தீவோடு நின்றுவிடவில்லை. அது தொடர்ந்து ஆதம்பால பவளத்திட்டுகள் வழியே ஒரு அரைவட்டம் அடித்து இலங்கை தலை மன்னாரை அடைந்து அங்கிருந்து இலங்கையின் மேற்குக் கரை ஓரம் மன்னார் தென் பகுதியில் நீள்கிறது.

சரி, விஷயத்திற்கு வருவோம். தூத்துக்குடி – இராமேஸ்வரம் பகுதியில் பவளத் தீவுகளுக்கு மேற்கே தமிழக நிலப்பரப்பு உள்ளது. மன்னார் பகுதியில் பவளத் தீவுகளுக்குக் கிழக்கே இலங்கையின் நிலப்பரப்பு உள்ளது. இதே Fringe Reef வகையைச் சேர்ந்த ஆதம்பாலம் பவளத்திட்டுகளுக்கு வடக்கே ஏன் நிலப்பரப்பு இல்லை. இருந்தது. இருந்திருக்க வேண்டும். அது தற்போது பாக் நீரிணையின் கீழ் மூழ்கிக் கிடக்கிறது. இது குறித்து விரிவாக முந்தைய பதிவில் பார்த்தோம்.

சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் தென்கிழக்குப் பகுதியையும், இலங்கையின் வடமேகுப் பகுதியையும் 120 கி.மீ அகல நிலப்பரப்பு இணைத்திருந்திருக்கும். அப்போது இந்த நிலப் பகுதியின் தெற்குக் கரையாக ஆதம் பாலம் இருந்திருக்க வேண்டும்..

கடல் மட்டம் உயர்ந்து இப்போதுள்ள நிலையை அடைந்தபோது அந்த நிலப்பகுதியின் தெற்கு எல்லையாக விளங்கிய ஆதம் பாலம் பகுதி இன்று பாதி மூழ்கியும் பாதி மூழ்காமலும் பாலம் போல் காட்சி அளிக்கிறது. ஆக, இன்றைய ஆதம் பாலம் அன்று கடற்கரைப் பகுதியாக இருந்திருக்கலாம். . அதற்கான ஆதாரங்களில் ஒன்று அங்கே காணப்படும் பவளத் திட்டுகள்.

இதை முடிவான முடிவாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரு கருத்து. அவ்வளவுதான்.

Comment here