/ இந்தியா / ஆதார் இணைய பக்கத்தில் குறைபாடுகள் ; ஆஸ்திரேலிய தகவல் பாதுகாப்பு அமைப்பான டிராய் ஹன்ட் எச்சரிக்கை!

ஆதார் இணைய பக்கத்தில் குறைபாடுகள் ; ஆஸ்திரேலிய தகவல் பாதுகாப்பு அமைப்பான டிராய் ஹன்ட் எச்சரிக்கை!

tamilmalar on 12/01/2018 - 11:52 AM in இந்தியா, உலகம்
Rate this post

ஆதார் இணைய பக்கத்தில் குறைபாடுகள் உள்ளதாக ஆஸ்திரேலிய தகவல் பாதுகாப்பு அமைப்பான டிராய் ஹன்ட் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு தனது வலைபக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ”இந்தியாவின் ஆதார் முறை பாதுகாப்பு நிறைந்ததாக இல்லை. யார் வேண்டுமானாலும் ஆதார் இணைய பக்கத்தில் உள்ள தகவல்களை இயக்கும் வகையிலேயே அதன் பாதுகாப்பு உள்ளது. நாங்கள் இந்தியாவின் ஆதார் கொள்கைக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், அதன் பாதுகாப்பில் குறைபாடுகள் உள்ளதை சுட்டிக்காட்ட வேண்டிய தேவையும், மாற்றி அமைக்கப்பட வேண்டிய கட்டாயமும் உள்ளது.

ஹேக்கர்கள் இத்தகைய குறைப்பாட்டை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் ஆதார் இணைய பக்கத்தில் உள்ள தகவல்களை திருடி, அவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. ஆதார் இணைய பக்கத்தின் தகவல்களை பாதுகாக்க இந்திய அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆதார் அடையாள அட்டையின் தகவல்கள் சட்ட விரோதமாக வெளியிடப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆதார் தகவல்களை பாதுகாக்க ஆதார் சேவை வழங்கும் உதாய் அமைப்பு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ் அனைவரும் ஆதார் எண்ணிற்கு பதிலாக அரசு வழங்கும் புதிய 16 இலக்க எண்ணை பயன்படுத்த வேண்டும். அதன் படி ஆதார் எண் கொண்ட அனைவருக்கும் இணையதளம் மூலம் புதிய 16 இலக்க எண் தரப்படும். இதன் மூலம் அந்தந்த நிறுவனங்களுக்கு தேவையான தகவல்கள் மட்டுமே பரிமாறப்படும்.

அதாவது, ஆதாரில் பெயர், பிறந்த தேதி, போட்டோ, முகவரி மற்றும் செல்போன் எண் ஆகிய 5 தகவல்கள் இருக்கும். இந்த புதிய எண் மூலம் அதிலிருந்து தேவையான தகவல் மட்டுமே எடுக்க முடியும். எடுத்துக்காட்டாக செல்போன் இணைப்பு பெற அந்நிறுவனத்திற்கு பெயர், போட்டோ மற்றும் முகவரி மட்டும் வழங்கப்படும். அதே போல் பாஸ்போர்ட் பெற அனைத்து தகவல்களும் அளிக்கப்படும் என உதாய் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கான ஆன்லைன் பதிவு மார்ச் மாதம் தொடங்கும். ஆதார் எண் கொடுக்க வேண்டிய அனைத்து இடங்களிலும் இந்த எண்ணை கொடுக்கலாம். அந்தந்த துறையினர் தங்களுக்கு தேவையான தகவல்கள் என்ன என்பதை தெரிவித்தால், அதன் படி திட்டம் அமைக்கப்படும். மேலும், இந்த புதிய எண்ணை தேவைப்படும் போது மாற்றிக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 POST COMMENT
Rate this article
Rate this post

Send Us A Message Here

Your email address will not be published. Required fields are marked *