ஆதி வேத  கால முருங்கைகீரை

Rate this post

முன்னோர்களால் போற்றப்பட்ட முருங்கைகீரை

ஆதி மனிதன் இலைகளையும் தழைகளையும்கைகளையும் கனிகளையும் உண்டு வந்தான்.படிப்படியாக உணவுகளை சமைத்து சாப்பிட ஆரம்பித்தான். அப்படி சமைத்து உண்ட உணவில் அதிகம் சேர்த்து கொண்டது முருங்கைகீரையை தான். அப்போது முதற்கொண்டு வழி வழியாக முருங்கைகீரையை மக்கள் பயபடுத்தி வருகின்றனர். நமது முன்னோர்களின் பலவித பழக்கவழக்கங்களில் புதைந்து கிடக்கும் ரகசியங்களில் முருங்கைகீரையும் ஒன்று. முருங்கைகீரை 300 விதமான நோய்களை கட்டுபடுத்தும் என கூறியுள்ளனர்.இதில் விஞ்ஞான பூர்வமாக பல கண்டுபிடிப்புகளும் நிருபித்துள்ளன. முருங்கைகீரையை சாம்பார்,கூட்டு, பொடி, சூப், பகோடா இன்னும் பலவேறு வகையான வகைகளில் பயன்படுத்தலாம், மீன்,இறால், மட்டன், சிக்கன் என பல்வேறு வகையுளும் பயன்படுத்துகின்றனர். அடை, டால், சுண்டல் அவியல்,கிச்சடி போன்றவையாகவும் செய்து வருகின்றனர்

இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளில் வகை வகையாக சமைத்து உண்ணக்கூடிய ஒரு கீரைவகையாகும் . முருங்கைகீரைக்கு மட்டுமே இத்தனை வகையாக  சமைக்க இயலும். ஏன் என்றால் இதில் உள்ள சத்துக்கள் அப்படி. முருங்கைகீரையில் புரதம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ், கொழுப்பு, கால்சியம், பொட்டாசியம், என பல்வேறு சத்துக்கள் இருபதனால் எலும்புநோய், ஜீரணம், உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய கண்நோய், மூட்டுவலி, இரத்தஅழுத்தம், இரத்தசோகை, தலைபோடுகு, நரம்புகளை பலம்பெறசெய் யும்  நாள் பட்ட நோய்களை தீர்க்ககூடிய சர்வரோக நிவாரணியாக செயல்படும் கர்பினிபெண்கள் முருங்கைக்கீரையை பயன்படுத்துவதால் கால்வீக்கம் குறியும் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும், பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் முகப்பருக்கள் சரியாகும். முருங்கைகீரையை உணவில் அதிகமாக சேர்த்துக்  கொண்டால்  நோய்களை கட்டுப் படுத்தலாம் என்பது சான்றோர்களின் அறிவுரையாகும்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*