அரசியல்

ஆந்திரா: அனந்தபூர் மாவட்டத்தில் வாக்கு இயந்திரத்தை உடைத்த வேட்பாளர் கைது

Rate this post
அனந்தபூர்,
ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவை தொகுதி மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவினை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அங்குள்ள அனந்தபூர் மாவட்டத்தில் கூட்டி வாக்குச்சாவடியில் புகுந்த ஜனசேனா கட்சியின் எம்.எல்.ஏ வேட்பாளர் மதுசூதன் குப்தா, வக்கு இயந்திரத்தை உடைத்து ரகளையில் ஈடுபட்டார். வாக்கு இயந்திரத்தில் தனது பெயர் தெளிவாக இல்லை எனக்கூறி இயந்திரத்தை உடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.

Comment here