தமிழகம்

ஆனி திருமஞ்சன திருவிழா மகா தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா மகா தரிசனம் நடந்தது. நடராஜர், சிவகாமசுந்தரி சமேதம் நடனமாடியபடியே பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

              சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 29 ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது

        அப்போது நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட்ட 5 சாமிகள் தேர்களில் வைத்து நகர வீதிகளை வலம் வந்தது. பின்னர் தேர் நிலைக்கு வந்தவுடன் ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டbi

        இன்று காலையில் மகாபிஷேகமும், அதைத் தொடர்ந்து பல்வேறு பூஜைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. லட்சார்ச்சனை, திருவாபரண அலங்காரம், சித்சபை ரகசிய பூஜைகளைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள்  புறப்பட்டு வீதிகளை வலம் வந்தது.

       பின்னர் மாலையில் மகா தரிசனம் நடந்தது. அப்போது நடராஜர் சிவகாமசுந்தரி சமேதமாக நடனம் ஆடியபடியே பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரியுடன் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

Comment here