ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்

Rate this post

என் இந்திய மக்களுக்கு வணக்கம்,

நமது தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தற்போதே செய்தி தாள்களிலும், தொலைகாட்சிகளிலும் மற்றும் வலைதளங்களிலும் அதி தீவிரமாக விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன.

இந்தியாவில் திருவிழா காலங்களில் பல ஆயிரம் கோடிரூபாய் வர்த்தகம் செய்ய இலக்கு நிர்ணையித்து இருக்கின்றன ஆன் லைன்னில் முன்னணி வர்த்தக நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிஃப்கார்ட்.

இந்திய மக்களே சற்று பின்நோக்கி யோசித்து பாருங்கள், சுமார் கி.பி.1600 களில் இதே போல் தான் கிழக்கிந்திய கம்பெனிக்கள் இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்து நம்மை அடிமை படுத்தியதை…

சுதந்திர காற்றை சுவாசித்த நாம் நம் சந்ததியினர்களை அடிமைகளாக்கவா வாழ்கிறோம்.

வாழ்க்கை சக்கரம் சுழலும் என்பார்கள் அதற்காக சுதந்திரத்தை கூட இழக்க தயாராகி விட்டோமா?

என் தமிழக மக்களே ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் நடத்தினீர்களே எதற்காக ?

நம் நாட்டு மாடுகளை அழித்து வெளிநாட்டு மாடுகளை ( மாடு போல் ஒரு இனம் ) இந்திய சந்தைக்குள் புகுத்தி இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைத்த பெருநிறுவனங்களை எதிர்த்து நின்றோமே, அந்த ஒற்றுமையை மீண்டும் தங்களிடம் காண விரும்புகிறோம்.

ஆன்லைனில் வாங்குபவர்களில் நிச்சயம் 40% சதவீதத்தினர் ஏமாற்ற படுகின்றனர். மேலும் ஆன் லைன் முதலாளிகள் வெளிநாட்டினரே.. அவர்களின் லாபம் வெளிநாடுகளுக்கே செல்லும்.

இந்த திருவிழா காலங்களில் நமக்கு தேவையானவற்றை நமது ஊர்களில் உள்ள நமது ஊரை சேர்ந்த சிறு வியாபாரிகளிடம் இருந்து வாங்குங்கள். இவர்கள் வளர்ந்தால் இந்திய பொருளாதாரம் உயரும். உங்களின் உரிமைகளும் உயரும்.

இல்லையென்றால் இந்த சிறுவியாபாரிகள் பெரு முதலாளிகளால் குறிப்பாக அந்திய முதலாளிகளால் அழிக்கப்படுவார்கள். பிறகு பெருநிறுவனங்களின் அங்கிகாரம் பெற்றவர்கள் வியாபாரம் செய்வார்கள் அவர்களின் கூலிக்காரர்களாக…

அவர்கள் சொல்லும் பொருட்களை அவர்கள் கூறும் விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுவோம்.

நமது சுதந்திரத்திற்காக போராடியவர்கள் நம் முன்னோர்கள். நமது சந்ததியினரின் சுதந்திரத்திற்காக போராடுவது நமது கடமை…

இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடும் தருணம் நரகாசூரன் என்கிற ஆன் லைன் வர்த்தகங்கள் அழிய வேண்டும். நம் இந்திய மக்களின் இல்லங்களில் தீப ஒளி சிறக்க வேண்டும்

ஒன்று படுவோம்… வென்று காட்டுவோம்…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*