உலகம்

ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசல் அருகே பயங்கர குண்டுவெடிப்பு – மக்கள் அலறி ஓட்டம்

Rate this post

வெடிகுண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள மசூதி அருகே இன்று வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த வெடி குண்டு தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வெடிகுண்டு வெடிப்பு தாக்குதலில் கரும்புகை வானுயரத்தில் எழுந்தது.

இது குறித்து உள்துறை அமைச்சர் அப்துல் நஃபி தாகூர் கூறுகையில், மசூதிக்கு அருகில் உள்ள பிரதான சாலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இந்த குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார். சம்பவ இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார்.

Comment here