இந்தியா

ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள், போலீசார் மற்றும் ராணுவ வீரர்களுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். நாட்டின் மத்திய பகுதியில் உள்ள டாய்குந்தி மாகாணத்தின் கஜ்ரான் மாவட்டத்தில் போலீஸ் சோதனை சாவடி மீது அதிகாலை பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியதில் 8 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 16 பேர் பலத்த காயம் அடைந்தனர். அதே சமயம் போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

Comment here