Sliderவரலாறு

ஆறுமுக நாவலர், பெருமை தமிழ் உலகம் உணருமா ?

அறுபது நூல்களை ப் பதிப்பித்த

ஆறுமுக நாவலர்

.

ஆறுமுக நாவலர் அவர்கள் எழுதிய அல்லது பதிப்பித்த நூல்பட்டியல்.— அகர வரிசையில் இதுவே அவரின் பெருமைக்கு அவரின் தமிழ்த் தொண்டிற்கு சான்று

அகத்தியர்அருளியதேவாரத்திரட்டு (நூல்)
அன்னம்பட்டியம் (நூல்)
இலக்கணக்கொத்து (நூல்)
இலக்கணச்சுருக்கம் (நூல்)
இலக்கணவிளக்கச்சூறாவளி (நூல்)
இலக்கணவினாவிடை (நூல்)
இலங்கைபூமிசாஸ்த்திரம் (நூல்)
ஏரெழுபது (நூல்)
கந்தபுராணவசனம் (நூல்)
கந்தபுராணம்பகுதி1-2 (நூல்)
கொலைமறுத்தல் (நூல்)
கோயிற்புராணம்(புதியஉரை) (நூல்)
சிதம்பரமான்மியம் (நூல்)
சிவஞானபோதமும்வார்த்திகமென்னும்பொழிப்புரையும் (நூல்)
சிவஞானபோதசிற்றுரை (நூல்)
சிவராத்திரிபுராணம் (நூல்)
சிவசேத்திராலயமஹாத்ஸவஉண்மைவிளக்கம் (நூல்)
சிவாலயதரிசனவிதி (நூல்)
சுப்பிரமணியபோதகம் (நூல்)
சூடாமணிநிகண்டுமூ.உரை (நூல்)
சேதுபுராணம் (நூல்)
சைவசமயநெறி (நூல்)
சைவதூஷணபரிகாரம் (நூல்)
சைவவினாவிடை (நூல்)
சௌந்தர்யலகரிஉரை (நூல்)
ஞானகும்மி (நூல்)
தருக்கசங்கிரகம் (நூல்)
தருக்கசங்கிரகதீபிகை (நூல்)
தனிப்பாமாலை (நூல்)
தாயுமானசுவாமிகள்திருப்பாடல்திரட்டு. (நூல்)
திருக்குறள்மூ.பரிமேலழகர்உரை (நூல்)
திருக்கைவழக்கம் (நூல்)
திருக்கோவையார்மூலம் (நூல்)
திருக்கோவையார்நச்.உரை (நூல்)
திருச்செந்தூர்நிரோட்டயமகவந்தாதி (நூல்)
திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்புராணம் (நூல்)
திருத்தொண்டர்புராணம் (நூல்)
திருமுருகாற்றுப்படை (நூல்)
திருவாசகம்-மூலம் (நூல்)
திருவிளையாடற்புராணம்-மூலம் (நூல்)
திருவிளையாடற்புராணம்-வசனம் (நூல்)
தெய்வயாணையம்மைதிருமணப்படலம் (நூல்)
தொல்காப்பியம்சூத்திரவிருத்தி (நூல்)
தொல்காப்பியம்சொல்.சேனா.உரை (நூல்)
நன்னூல்-காண்டிகைஉரை (நூல்)
நன்னூல்-விருத்திஉரை (நூல்)
நீதிநூல்திரட்டுமூலமும்உரையும் (நூல்)
நைடதஉரை (நூல்)
பதினோராம்திருமுறை (நூல்)
பாலபாடம்-4தொகுதிகள் (நூல்)
பிரபந்தத்திரட்டு (நூல்)
பிரயோகவிவேகம் (நூல்)
புட்பவிதி (நூல்)
பெரியபுராணவசனம் (நூல்)
போலியருட்பாமறுப்பு (நூல்)
மார்க்கண்டேயர் (நூல்)
யாழ்ப்பாணச்சமயநிலை (நூல்)
வக்கிரதண்டம் (நூல்)
வாக்குண்டாம் (நூல்)
விநாயககவசம் (நூல்)
அவரே எழுதிய சில நூல்களைத்தவிர , இதர இத்தனை நூல்களை ஓலைச் சுவடிகளில் இருந்து பாட பேதம் கண்டு அரும் பாடுபட்டுப் பதிப்பித்த அவரின் பெருமை தமிழ் உலகம் அறியுமா ?எத்தனை உழைப்பும் , ஆற்றலும் இத்தனைப்பதிப்பித்தலுக்குத் தேவை .என தமிழ் சமூகம் புரிந்துகொள்ளுமா ?

ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 இல் (சித்திரபானு ஆண்டு மார்கழி 5) புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை – சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு கடை மகவாகப் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை என்பதாகும்.
தகப்பனார் ப. கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தர், பூட்டன் இலங்கைக்காவல முதலியார் ஆகிய அனைவரும் தமிழ் அறிஞர்கள்.
அப்போதைய அரசாங்கத்தில் வேலை பார்த்தவர்கள்.
நாவலருக்கு நான்கு மூத்த சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். சகோதரர்கள் நால்வரும் அரசாங்க உத்தியோகத்தர்கள்.
சகோதரிகளுள் ஒருவர் வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை அவர்களின் தாயார்.ஆகும் .

தனது ஐந்தாவது வயதில் துவக்கக் கல்வியை த்தொடங்கிய நாவலர், நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களையும் தமிழையும் கற்றார் ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். மூத்த தமையனாரால் முதலில் சரவணமுத்துப் புலவரிடமும் பின்னர் அவரது குருவாகிய சேனாதிராச முதலியாரிடமும் உயர்கல்வி கற்க அனுப்பப்பட்டார். பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார்.

யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில் கற்று ஆங்கிலத்திலும் திறமை பெற்றார். அவரது 19வது வயதில்(1841) அப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்ற நாவலர், அப்பாடசாலையின் நிறுவனராயும், அதிபராயுமிருந்த பேர்சிவல் பாதிரியார் கிறித்தவ விவிலியத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும் வேலைக்கு உதவியாக இருந்து பணியாற்றினார். பேர்சிவல் பாதிரியருடன் சென்னைப்பட்டணம் சென்று அச்சிடுவித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினார்.
இலங்கை வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம்பித்தார். சமய வளர்ச்சிக்குத் தமது முழு நேரத்தையும் செலவிடத் தீர்மானித்து செப்டம்பர் 1848 இல் தமது மத்திய கல்லூரி 3 பவுண் மாதச் சம்பள ஆசிரியப் பணியைத் துறந்தார்.

அச்சு இயந்திரம் வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன் 1849 ஆடி மாதம் சென்னை சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார். சென்னையில் சிலகாலமிருந்து சூடாமணி நிகண்டுரையும் சௌந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதித்தபின் ஓர் அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார்.
தமது இல்லத்தில் வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.

பின்பு பெரியதொரு அச்சியந்திரத்தை விலைக்கு வாங்கி, சென்னை தங்கசாலைத் தெருவில் வித்தியானுபாலன இயந்திரசாலை என்ற அச்சகம் நிறுவிப் பல நூல்களையும் அச்சிட்டார். சென்னையிலும் திருவாவடுதுறை மற்றும் திருநாகைக்கோராணம் ஆகிய இடங்களில் தங்கி சைவப்பிரசங்கங்கள் செய்துவந்தார் .
1875க்கும் 1878க்கும் இடைப்பட்ட காலத்தில் நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடல் புராணம், நன்னூற் காண்டிகையுரை, சிவபூசா விதி, மூன்றாம் அனுட்டான விதி, குரு சிஷ்யக் கிரமம், பூசைக்கு இடம்பண்ணும் விதி, சிராத்த விதி, தருப்பண விதி, போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சமக்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் நாவலர் ஈடுபட்டார்.
இவரது பணிகள் தமிழ் நாட்டிலும் , இலங்கையிலும் தொடர்ந்தன .

நாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசை நாளான ஆடிச்சுவாதி அன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் இடம்பெற்றது. 1879ஆம் ஆண்டு (பிரமாதி வருடம்) கார்த்திகை மாதம் 18ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாவலரது உடல் நலம் குன்றியது.
05-12-1879 இரவு தேவாரம் முதலிய அருட்பாக்களை ஓதும்படிக் கட்டளையிட்டு , கைகளைச் சிரசின்மேற் குவித்து,சிவநாமம் செப்பியவாறே இரவு ஒன்பது மணியளவில் இவ்வுலகை விட்டு மறைந்தார்..

சைவத்துக்கும் தமிழுக்கும் சிறந்த தொண்டாற்றிய உயர்திரு ஆறுமுகநாவலர்,
அவர்களின் புகழ் அவர் பதித்த தமிழ் நூல்கள் இருக்கும் வரை நிலைத்திருக்கும் .

அண்ணாமலை சுகுமாரன்

Comment here