இந்தியா

ஆற்றில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய சி.ஆர்.பி.எப்., வீரர்கள்

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள நதியில் குளித்த 14 வயது சிறுமியை ஆற்றுநீர் இழுத்துச் சென்றது. இந்நேரத்தில் ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் 5 பேர் ஆற்றில் குதித்து சிறுமியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

காஷ்மீர் நதியில் மூழ்கிய சிறுமியை சி.ஆர்.பி.எப்., வீரர்கள் காப்பாற்றிய வீடியோ வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ தற்போது வேகமாக பகிரப்பட்டு வருவதுடன் வீரர்களுக்கு பாராட்டும் குவிந்து வருகிறது.

Comment here