மாவட்டம்

ஆலந்தூர், முகப்பேரில் அலங்கார மீன் கடைகளில் 28 கிலோ பவளப்பாறை பறிமுதல்; 2 பேர் கைது

சென்னை,

சென்னையில் அரிய வகை பவளப்பாறையை கடத்தி, ஒரு கும்பல் விற்பனை செய்து வருவதாக மத்திய வன குற்றப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஆலந்தூர் மற்றும் முகப்பேரில் செயல்பட்டு வந்த பிரபல அலங்கார மீன் விற்பனை கடைகளில், மத்திய வன குற்றப்பிரிவினர் தென் மண்டல இயக்குனர் உமா அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு இருந்த சுமார் 28 கிலோ பவளப்பாறைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அலங்கார மீன் கடை நடத்தி வந்த 2 பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள பவளப்பாறையின் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அரிய வகை கடல் வாழ் உயிரினமான பவளப்பாறையை இந்திய வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின்படி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி அதனை கடத்துபவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.

Comment here