ஆவடியில் அதிமுக 47-வது ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

Rate this post

இலங்கையில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எந்த விதத்திலும் இந்திய அரசு காரணமில்லை – ஆவடியில் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பேட்டி

அதிமுகவின் 47 வது ஆண்டு துவக்கவிழா நாடு முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆவடி அடுத்த திருநின்றவூர் காந்தி சிலை அருகில் ஆவடி சட்டமன்ற தொகுதி அதிமுகவின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு,தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் 18 எம்எல்ஏ விவகாரத்தில் அரசின் தலையீடு ஏதுமில்லை
சபாநாயகர் எடுத்த முடிவு சரியானது என்று நீதிமன்றம் தீர்பளித்துள்ளது என்பதை திருமாவளவன் சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்று கூறினார்.

விலகி சென்றவர்கள் திரும்பி வந்தால் இணைத்து கொள்வோம் என்றே ஈபிஎஸ்,ஓபிஎஸ் கூறியிருக்கிறார்களே தவிர பதவியோ மீண்டும் போட்டியிட வாய்ப்பு தருவதாக எந்த வாக்குறுதியும் தரவில்லை என்று கூறினார்.

இலங்கையில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எந்த விதத்திலும் இந்திய அரசு காரணமில்லை என்றும் அங்கு தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பதே அதிமுகவின் நோக்கம் எனக்கூறினார்.

ஒரு குடும்பத்தின் கீழ் ஆட்சியும்,கட்சியும் சென்று விடக்கூடாது என்றே அன்று பிரிந்து சென்றதாகவும், இரட்டை இலை சின்னத்தை காப்பாற்றவே மீண்டும் ஒன்றிணைந்தாகவும் கூறிய அவர் கழகத்தை காக்கவே கழகத்திற்கு வழு சேர்க்கவே ஓன்றிணைந்தோம் மனசாட்சி பிரச்சனை ஏதுமில்லை எனவும் தெரிவித்தார்.

Visual*
http://sendanywhe.re/41ZQHLWX

*Byte*
http://sendanywhe.re/8297MDNC

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*