உலகம்

ஆஸ்திரேலியாவின் பவளப்பாறை திட்டுகளை வான்வழியாக ஆராய நாசா திட்டம்! ;

ஆஸ்திரேலியாவின் குயின்லேண்ட் பகுதியில் உள்ள கிரேட் பேரியர் ரீப் என்றழைக்கப்படும் பவளப்பாறை திட்டுக்களை வான்வழியாக ஆராய நாசா திட்டமிட்டுள்ளது.

ஆஸ்திரேலயா கண்டத்திற்கு கிழக்கே பசிபிக் பெருங்கடல் பகுதியில் குயின்லேண்ட் அருகே கிரேட் பேரியர் ரீ்ப் என்றழைக்கப்படும் பவளப்பாறை திட்டுக்கள் அமைந்துள்ளன. உலகிலேயே உயிரினங்களால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய தனித் தொகுப்பாக விளங்கும் இதை விமானம் மூலம் ஆய்வு மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது.

இதன்படி பவளப்பாறைகளை புதிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து மனிதனின் செயல்பாடு, சுற்றுப்புற சூழ்நிலை மற்றும் இயற்கையால் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து நாசா அறிக்கை தயார் செய்ய உள்ளது. இந்த ஆராய்ச்சி இரண்டு மாதங்கள் வரை நீடிக்கும் என ஆராய்ச்சி குழுவின் தலைவர் எரிக் .கோக்பெர்க் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே மிகப்பெரிய பவளப்பாறைகளின் தொகுப்பான இதில் கிட்டதட்ட 3000 பவளப்பாறைகளும், 900 தீவுகளும் காணப்படுகிறது. இது கிட்டதட்ட 2,300 கி.மீ நீளமும், 3 லட்சத்து 44 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவும் கொண்டுள்ளதாக இருக்கிறது. எண்ணற்ற அரிய வகை கடல் வாழ் உயிரனங்களையும், அற்புத மான சுற்றுச் சுழலையும் ரசிக்க உலகம் முழுவதும் இருந்து ஆண்டு தோறும் சுமார் 20 லட்சம் சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment here