இதயம் தொடர்பான நோய் வரவே வராது

Rate this post

இதய அடைப்பை நீக்க இயற்கையில் தயாரிக்கப்படும் அருமையான மருந்து. இதயம் பலப்பட குறிப்பாக இதயம் தொடர்பான நோய் வரவே வராது.

தினமும் மிக எளிதான உடற்பயிற்சியான நடைபயிற்சி இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதயம் பலப்பட ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது மிதமான வேகத்தில் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இதனால் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.

வெங்காயத்தில் இரத்தத்தை நீர்மைப்படுத்தும் குணமும் கொழுப்பை கரைக்கும் குணமும் உண்டு. தினமும் 25 கிராம் முதல் 50 கிராம் வரை வெங்காயத்தை எடுத்து கொள்வதன் மூலம் சுருங்கிய இதய வால்வுகளில் இரத்தம் எளிதாக சென்று வர உதவுவதுடன் கொஞ்சம் கொஞ்சமாக கொழுப்பை கரைத்து இதய வால்வின் அடைப்பையும் குணப்படுத்தலாம்.

தினமும் 5 பல் பூண்டினை பாலில் கலந்து பருகி வர இதய வால்வுகளில் உள்ள அடைப்பு நீங்குவதொடு மீண்டும் இரத்த குழாயில் அடைப்பு வராமலும் தடுக்கலாம்.

இதய வால்வு அடைப்பு நீங்க ஒரு டம்ளர் வடிகட்டிய எலுமிச்சை சாறு, ஒரு டம்ளர் பூண்டு சாறு, ஒரு டம்ளர் இஞ்சி சாறு, ஒரு டம்ளர் ஆப்பிள் சைடர் வினிகர் நான்கையும் சம அளவில் எடுத்துக்கொண்டு இந்த கலவையை அடுப்பில் சிம்மரில் வைத்து 60 நிமிடங்கள் வைக்க வேண்டும். நான்கு பங்கு மூன்றாக மாறியதும் அடுப்பை அணைத்து அதனுடன் சம அளவில் தேனை சேர்த்து ஒரு பாட்டிலில் வைத்துக்கொள்ள வேண்டும். நாள்தோறும் காலை உணவிற்கு முன் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டால் இதய அடைப்புக்கான அறுவை சிகிச்சையில் இருந்து விடுபடலாம். இதய அடைப்புக்கான ஓர் அருமையான மருந்து இது.

தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் இதய வால்வு அடைப்பு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

இதய வால்வு அடைப்புக்கு இஞ்சி ஒரு நல்ல மருந்து. இஞ்சி சாறினை தினமும் அருந்தினால் இதய வால்வு அடைப்பு நீங்கும். இஞ்சி சாருடன் தேன் எலுமிச்சை சாறு சர்க்கரை கலந்து குடித்தால் சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*