/ வேலை வாய்ப்பு / இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

tamilmalar on 13/11/2017 - 9:17 AM in வேலை வாய்ப்பு
Rate this post

நமது நாட்டின் எரிபொருள் உற்பத்தி மற்றும் பங்கீட்டில் மிக முக்கிய பங்கு வகிப்பதுதான் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எனப்படும் ஐ.ஓ.சி.எல்., நிறுவனம். சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தில் பல்வேறு மண்டலங்களில் காலியாக இருக்கும் 214 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

பிரிவுகள் : பாய்லர் ஆப்பரேஷன்ஸ் இன்ஜினியரில் 33, குவாலிட்டி கன்ட்ரோல் ஆபிசரில் 44, பயர் அண்டு சேப்டி ஆபிசரில் 50, மெடிக்கல் ஆபிசரில் 18, எச்.ஆர்., ஆபிசரில் 50, உதவி இந்தி அதிகாரியில் 19ம் சேர்த்து மொத்தம் 214 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அதிகபட்ச வயது : பாய்லர் ஆபரேஷன்ஸ் பிரிவுக்கு 32, மெடிக்கல் ஆபிசர் பதவிக்கு 32, எச்.ஆர்., அதிகாரிக்கு 28, உதவி இந்தி அதிகாரி பதவிக்கு 30ம் அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி : பாய்லர் ஆப்பரேஷன்ஸ் இன்ஜினியர் பதவிக்கு பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரிகல் பிரிவில் படித்திருக்க வேண்டும். குவாலிட்டி கன்ட்ரோல் ஆபிசர் பதவிக்கு வேதியியலில் பி.எச்.டி., படிப்பு தேவை. பயர் அண்டு சேப்டி ஆபிசர் பதவிக்கு பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை பயர் இன்ஜினியரிங் தொடர்பான பிரிவில் முடித்திருக்க வேண்டும். மெடிக்கல் ஆபிசர் பதவிக்கு எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ்., அனஸ்தாலஜி, கைனகாலஜி, ஆர்தோபீடிக்ஸ், போன்ற ஏதாவது ஒரு தகுதி தேவைப்படும். எச்.ஆர்., ஆபிசர் பதவிக்கு எம்.பி.ஏ.,வை எச்.ஆர்., புலத்தில் படித்திருக்க வேண்டியிருக்கும். இந்தி அதிகாரி பதவிக்கு இந்தியில் முதுநிலை பட்டப் படிப்பு தேவைப்படும். சரியான தகவல்பெற இணையதளத்தைப் பார்க்கவும்.

தேர்ச்சி முறை : விண்ணப்பிக்கும் பதவியைப் பொறுத்து எழுத்துத் தேர்வு, குழு விவாதம் அல்லது நேர்காணல் மட்டும் என்ற முறையில் தேர்ச்சி உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2017 நவ., 18.

விபரங்களுக்கு : www.iocl.com/PeopleCareers/job.aspx

0 POST COMMENT
Rate this article
Rate this post

Send Us A Message Here

Your email address will not be published. Required fields are marked *